சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்ப்பு செய்த கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sahitya Akademi award for Best Translation in Tamil is announced for K.Sellappan

ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமினிவ் மொழிபெயர்ப்பு செய்ததற்காக கே.செல்லப்பனுக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கா.செல்லப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1936 ஆம் ஆண்டு பிறந்த செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல்வேறு முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்லப்பனுக்கு 50,000 ரூபாய் பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கப்பட உள்ளது.

 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்னது இதுதான் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்னது இதுதான்

English summary
Sahitya Akademi award Tamil translation latest news. K.Sellappan's Tamil Translation for Rabindranath Tagore Kora book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X