சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்!

Google Oneindia Tamil News

சேலம்: சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற விமானத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 56 பேர் சென்ற நிலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Recommended Video

    5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்- வானிலை மையம் தகவல்

    கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

    salem: 6 flyers from Chennai to salem test positive for Covid-19

    இந்த சூழலில் நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது. விமானத்தில் பயணிப்பதற்கு கட்டாயம் இபாஸ் வாங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு வந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் பயணிகள் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் 56 பேர் சென்றனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனயில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் பயணித்த 50 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அண்மையில் சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் 24 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இதுவரை இல்லாத உச்சம்.. திணறும் தமிழகம்.. ஒரே நாளில் 827 கொரோனா கேஸ்கள்.. 20 ஆயிரத்தை நெருங்குகிறது! இதுவரை இல்லாத உச்சம்.. திணறும் தமிழகம்.. ஒரே நாளில் 827 கொரோனா கேஸ்கள்.. 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

    இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். விமானத்தில் பயணிப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    6 people who travelled to Salem from Chennai yesterday by air have been tested positive for Covid-19, says Deputy Director Health department, Salem, Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X