• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"என்ன ஊரு இது?.. இன்னுமா கண்டுபிடிக்க முடியல.. தேசிய அளவில் டிரெண்டாகும் "#இளமதி_எங்கே"

Google Oneindia Tamil News

சென்னை: "என்ன ஊருடா இது? த்தூ... இந்த பெண்ணை யார் கடத்தியுள்ளனர் என்று தெரிந்தும் கூட கண்டுபிடிக்க முடியலை" என்று கடத்தப்பட்ட இளமதி தொடர்பாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ட்விட்டரில் #இளமதி_எங்கே என்ற ஹேஷ்டேக்கையும் தேசிய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்... இது அதிமுக - பாமகவுக்கு பெருத்த குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரியை சேர்ந்தவர் செல்வன் என்பவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார். தன்னுடன் வேலை பார்க்கும் இளமதி என்ற பெண்ணை காதலித்தார்.

இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.. இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவர் என்கிறார்கள்.. செல்வன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க செல்வன் கோரிக்கை விடுக்கவும், அதன்படியே சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே பெரியார் படிப்பகத்தில் 4 நாளைக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது.

கொங்கு அமைப்பு

கொங்கு அமைப்பு

ஆனால், பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் இளமதியை அன்றைய தினமே கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.. கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இளமதியை இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியும் இதே கோரிக்கை விடுத்திருந்தார்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி செந்தில்குமாரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். இப்போது நெட்டிசன்கள் #இளமதி_எங்கே என்று இணையத்தில் ஹேஷ்டேக்கும் உருவாக்கிவிட்டனர்.. இதனால் தேசிய அளவில் இளமதி எங்கே என்ற வாசகம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

என்ன ஊருடா இது தூ!

My heart breaks when I see this photo. எவ்வளவு ஆசையோட கல்யாணம் செஞ்சு இருப்பாங்க. தமிழக போலீஸார் எல்லாவற்றையும் உடனடியாக கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணை யார் கடத்தியுள்ளனர் என்று தெரிந்தும் கூட கண்டுபிடிக்க முடியலை. என்ன ஊருடா இது? Thoo.

ரஜினி ரசிகர்களுக்கு கொட்டு

#இளமதி_எங்கே . ரஜினி ரசிகர்கள் தங்களது தலைவரைப் பற்றியும், முதல்வர் , பிரதமர் பற்றியும்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாருமே தமிழகத்தின் பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை. மக்கள் ஆதரவைப் பெற முதலில் தெருவுக்கு வாருங்கள். நேரடியாக முதல்வர், பிரதமர் என்று பேசிக் கொண்டிருக்காதீங்க.

நான்கு நாட்களாகி விட்டன

#இளமதி_எங்கே . இளமதி கடத்தப்பட்டு நான்கு நாட்களாகி விட்டது. இன்னுமா அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக முதல்வரும், தமிழக காவல்துறையும்தான் பொறுப்பு என்று இவர் கோபமாகவே கூறியுள்ளார். நான்கு நாட்களாகியும் இந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்றுதான் பலரும் வருத்தப்படுகிறார்கள்.

செந்தில்குமாருக்கு நன்றி

இளமதி_எங்கே என்ற ஹாஷ்டேக் டிரெண்டாவது ஏன்? கடத்தப்பட்டு நான்கு நாட்கள் ஆகும் நிலையில், இளமதியின் நிலை என்ன? அவர் எங்கு இருக்கிறார்? தமிழக போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை பலர் எழுப்புகின்றனர். நன்றி @DrSenthil_MDRD #Whereis_ilamathi

தலைவலி

தலைவலி

இந்த பிரச்சனை ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.. பாமக தரப்பினர்தான் கடத்திவிட்டார்கள் என்று திருமாவளவன் பகிரங்கமாகவே முதல்வருக்கு அறிக்கை மூலம் சொல்லி உள்ளார்.. இதனால் கூட்டணியில் உள்ள பாமக தரப்ப மற்றும் தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் செயல்பாடு என பல வித தர்மசங்கடங்களுக்கு அதிமுக ஆளாகி உள்ளது.. கடைசியில் இளமதி விவகாரம் திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி என்ற ரேஞ்சுக்கு மாறி வருகிறது.

English summary
salem ilamathi kidnap issue twitter hashtag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X