சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு சேலம் சுற்று வட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படுகிற ஒரு திருநாளாகும். ஆடி மாதமானது தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்படுகின்றது.

கலை, அறிவியல் கல்லூரிகள்- பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை- ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்கலை, அறிவியல் கல்லூரிகள்- பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை- ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Salem People Celebrate birth of Aadi month

புதுமண தம்பதிகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி 1-ந் தேதியை கொண்டாடும் விதமாக தேங்காயை உரைத்து அதில் நாட்டு சர்க்கரை, கடலைப்பருப்பு, அவுள் போன்ற நவதானியங்களை சேர்த்து சுட்டு முதற் கடவுளான விநாயகருக்கு உடைத்து வழிபடுவது வழக்கம்.

Salem People Celebrate birth of Aadi month

சேலம் மாவட்டம் எடப்பாடி, வெள்ளாண்டி வலசு, நைனாம்பட்டி, ஆகிய பகுதிகளில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுகூடி தேங்காய் சுட்டு உடைத்து விநாயகரை வழிபட்டனர். இது சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் தனித்த பாரம்பரிய விழாவாகும்.

Salem People Celebrate birth of Aadi month

தேங்காய் சுடும் பண்டிகை மகாபாரத கதையுடன் தொடர்புடையதாகவே கூறப்படுகிறது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. இந்த யுத்தம் ஆடி 18 அன்று முடிவுக்கு வந்ததை நினைவுகூறும் வகையில் ஆடி 1-ம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Salem People Celebrate birth of Aadi month
English summary
In Tamilnadu, Salem People Celebrated birth of Aadi month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X