சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் இனி ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தேர்வு அட்டவணை, 11, 12 வகுப்பு தேர்வுமுறைகளில் மாற்றம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

Same Education System will be implement From next Academic Year Announcement By Sengottaiyan

இந்தநிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 3,000 அரசு பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்படும்.

வரும் கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் .

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம். 12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

English summary
Minister sengottaiyan announced that the same education will be implemented from next education year in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X