• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஷேவ்" பண்ண மாட்டீங்களா.. எதிர்பார்க்காத சனம்.. வெட்கம் கொப்பளிக்க.. கலகல பிக் பாஸ் வீடு

|

சென்னை: "ஷேவ் பண்ண சொன்னால் கேட்கிறதே இல்லை" என்ற குற்றச்சாட்டு முதல், "குரூப்பிஸம் கிசுகிசு" வரை பிக்பாஸ் வீடு நேற்று பற்றி கொண்டு எரிந்தது!

பிக் பாஸ் வீட்டில் எல்லா விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தவர் யார் என்பதுதான் நேற்றைய டாஸ்க்.. அதில் ஆளாளுக்கு ஒரு பெயரை சொல்லி கொண்டே வந்தாலும், பாலாஜியின் ரொமான்டிக் தனி ரூட்டில் கிளம்பியது..

ஷிவானியுடன் பாலாஜியை கோர்த்துவிடும் வேலையும் அவ்வப்போது நடக்கவே செய்தாலும், நேற்றைய தினம் இது சற்று டிராக் மாறிவிட்டது. முதல் ஆளாக சனம் ஷெட்டிக்கு ஓட்டு போட்டு தன் ஆதரவை சொன்னார் பாலாஜி.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்க சனம் முகம் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் மலர்ந்ததை பார்க்க முடிந்தது.

 லவ் ஸ்டோரி

லவ் ஸ்டோரி

அவரை அந்த நேரம் பார்த்து கேபி கையால் ஹார்ட் போட்டு, பாலாஜி-சனம் இடையே ஒரு லவ் ஸ்டோரியை கிரியேட் செய்து வைத்தார்... முக்கோண காதலாக உருவாகும் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லாருக்கும் நேற்று கேபி சரியான ஆப்பு வைத்து, ரூட்டை அவர்கள் இருவர் பக்கமும் திருப்பிவிட்டு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

 ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ்

இதில் பர்த்டே பேபி ஜித்தன் ரமேஷின் தாடியை பார்க்க போரிங்காக இருக்கிறது என்று சுரேஷ் குற்றச்சாட்டை வைத்தார்.. தாடியை பிக்பாஸ் ஷேவ் பண்ண சொன்னாலும் ஜித்தன் ரமேஷ் கேட்க மாட்டார் போல! எப்படி பார்த்தாலும் இந்த முறை அர்ச்சனா அல்லது சனம் தான் வரும் வாரம் கேப்டனாக இருப்பார்கள் என்று தெரிகிறது.. போரிங் ஆட்டக்காரர் விருது வாங்கி கொண்டு, ஆரியும், ஆஜித்தும் ஜெயிலுக்கு போயுள்ளனர்!

குரூப்பிஸம்

குரூப்பிஸம்

நேற்றை நிகழ்ச்சியில் 2 முக்கியமான விஷயங்கள் நடந்தன.. ஒன்று "ரியோவை அந்த குரூப் சேவ் பண்றாங்க" என்று மெதுவாக கிசுகிசுவை கொளுத்தி போட்டார் அனிதா.. நாமினேட் பண்ணின பாலாவும், நிறைய சர்ச்சைக்கு உள்ளாகி வரும் ஆரியும் இதில் இணைந்து கொண்டு தங்கள் பங்குக்கு புறம் பேசினர்... அர்ச்சனா, நிஷா எல்லாருமே ரியோவை மேலே கொண்டு வரணும்னு நினைக்கிறாங்க என்று இவர்கள் பேசிய விவகாரம் நிச்சயம் இன்னொரு நாள் வெடித்து கிளம்பும் என்றே தெரிகிறது.

வேல்முருகன்

வேல்முருகன்

அடுத்ததாக, வேல்முருகன் பெயரை பாலா எழுந்து சொன்னார்.. அதற்கு வேல்முருகன் "ஏன் டார்கெட் பண்றீங்க" என்று கேட்க, அதற்கு பாலா, "நீங்க ரொம்ப டிப்ளமேஸியா இருக்கீங்க" என்று சொன்னார்.. அதற்கு "நான் என்ன செஞ்சேன்" என்று வேல்முருகன் மறுபடியும் கேட்க, "டிப்ளமேஸி"ன்னா முதல்ல அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டார் பாலா.

 மொழி ஆதிக்கம்

மொழி ஆதிக்கம்

இந்த கேள்வியை வேல்முருகன் எதிர்பார்க்கவில்லை.. நொறுங்கிதான் போய்விட்டார்.. இதுதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. ஏற்கனவே வேல்முருகன் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும்போது, நிச்சயம் இந்த வார்த்தை அவரை மேலும் காயப்படுத்தியே இருக்கும்.. இங்கிலிஷ் தெரியவில்லை என்பதால் மட்டமா? அல்லது இங்கிலீஷ் தெரிந்தால் கெத்தா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.. பாலாவின் நடத்தை ஒருவகையில் மொழி ஆதிக்கமே.. இப்படி மொழி ஆதிக்கம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், தாழ்மை உணர்ச்சியும் அதிகரிக்கும் என்ற அபாயமும் உள்ளது!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sanam and Balaji may fall in love in Bigg Boss house: Bigg boss 4
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X