சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் மணல் தட்டுப்பாடு.. முடங்கிய கட்டுமான துறை.. 1 யூனிட் விலையை கேட்டு அதிரும் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 1 யூனிட் மணல் ரூ.550க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1300 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை வட்டாரங்கள், தங்களது கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 13 மணல் குவாரிகள் உள்ளதாக கூறியுள்ள. ஆனால் இந்த குவாரிகள் மூலம் கிடைக்கும் குறைவான மணல் அளவால், கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Sand Stripping in Tamil Nadu .. construction sector Paralyzed.. People shocked when Listening price

இதனையடுத்து புதிய மணல் குவாரிகளை திறக்க அரசுக்கு கட்டுமான சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 22 குவாரிகளை திறக்க அனுமதி கேட்ட இடத்தில், தற்போது, 13 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தித்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறை தளர்ந்த பிறகு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள புதிய 13 மணல் குவாரிகள் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மணல் தட்டுப்பாட்டால், ரூ.550க்கு விற்கப்பட்ட 1 யூனிட் மணல் தற்போது ரூ.1300 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் புதிதாக கட்டிடம் கட்டி வரும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, கடந்த 6 மாதங்களில் மட்டும் 40,000 லோடு மணல் புக் செய்து காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கேட்டால் எல்லா குவாரிகளையும் வெயிட்டிங்கை எடுத்து விட்டனர் என்கிறார்கள். ஆனால் தமிழக அரசு வேண்டுமென்றே செயற்கயைாக மணல் விலையை உயர்த்தி விட்டது. தற்போது நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டால் ஒரு லோடு மணல் விலை ரூ.1 லட்சம் என்று விற்பனையாவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்னது ஜனநாயக நிறுவனங்களை பாஜக காப்பாற்றப் போகிறதா? என்னது ஜனநாயக நிறுவனங்களை பாஜக காப்பாற்றப் போகிறதா?

மலேசிய மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே சென்னையில் திருட்டு மணல் 3 யூனிட் ரூ.26,000 கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சென்னையிலிருந்து மணலை கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு போக முடியாது. எனவே அங்கு ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் விலை தாறுமாறாக எகிறியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

English summary
In Tamil Nadu, the sale of 1 unit sand was sold at Rs.550 and now the price has risen to Rs.1300 peoples shocked
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X