சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவுன்சிலர் தேர்தலில் போட்டி..விசிட்டிங் கார்டுடன் வீட்டில் குவிந்த இளைஞர்கள்.. சந்தியாவின் மறுபக்கம்

கொலையுண்ட சந்தியா அரசியலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ

    சென்னை: விஷயம் தெரியுமா? படுகொலை செய்யப்பட்ட சந்தியாவுக்கு அரசியல் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. எப்படியாவது அரசியலில் கால் பதிக்கவும் நிறைய முயற்சிகளை அவர் எடுத்து வந்திருக்கிறார்.

    சந்தியா சின்ன வயசிலேயே ரொம்ப அழகா இருப்பாராம். ஆனால் குடும்பமோ ஏழை. அவருடைய அப்பா ஊர்ல டீக்கடை நடத்தி வந்திருக்கிறார்.

    அதனால்தான் சந்தியாவை 7-ம் வகுப்பு வரை படிக்க வெச்சும், மேற்கொண்டு படிக்க வைக்க வசதி இல்லாமல் படிப்பை நிறுத்திவிட்டார்.

    பேச்சு

    பேச்சு

    ஆனால் அனைவரிடமும் கேஷூவலாக பேசக்கூடியவர் சந்தியா. பாலகிருஷ்ணனுடன் கல்யாணம் ஆன பிறகுதான் சந்தியாவின் எண்ணம், செயல், சிந்தனை, போக்கு என எல்லாமே மாறியது. அப்போ சந்தியாவுக்கு வயசு 16தான்.

    தோல்விதான்

    தோல்விதான்

    பாலகிருஷ்ணன்தான் முதலில் அரசியலில் ஈடுபட்டார். அதுவும், ஒரு கட்சியின் தூத்துக்குடி நகர செயலாளராக பொறுப்பில் இருந்தவர். மாவட்ட செயலாளராகவும் வளர்ந்தார். இதனால்சந்தியாவுக்கு அரசியல் தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், பாலகிருஷ்ணன் சினிமாவுக்கு போய்விட்டார்.

    சுயேட்சை

    சுயேட்சை

    ஆனாலும் சந்தியா, கிடைத்து வந்த அரசியல் தொடர்பை இழக்கவில்லை. இதனால் தானும் அரசியலில் போட்டியிடலாம் என முடிவு செய்தார். அதற்காக கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி நகராட்சி கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டார் சந்தியா.

    வாக்கு சேகரிப்பு

    வாக்கு சேகரிப்பு

    இந்த தருணம்தான் சந்தியாவை மாற்ற தொடங்கியது. பேச்சு, நடவடிக்கை, செயல் என எல்லாமே ஒரு தினுசாக மாற ஆரம்பித்தது. "எனக்கு மட்டும் ஓட்டு போட்டீங்கன்னா, என்னை எப்போ வேணும்னாலும் என்னை வந்து சந்திக்கலாம்" என்று சொல்லியே வாக்கு சேகரித்தார் சந்தியா. அது மட்டுமில்லை, தன்னுடைய செல்போன் நம்பருடன் விசிட்டிங் கார்டையும் தொகுதி மக்களுக்கு கொடுத்தார். சந்தியாவின் செல்போன் மூலம் நிறைய இளைஞர்களின் நட்பு பெருக ஆரம்பித்தது.

    தோல்வி

    தோல்வி

    பிறகு வீடு தேடி இளைஞர்கள் வர ஆரம்பித்து... அது பாலகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் போய்.. ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டது வேறு கதை. ஆனால் வளைச்சு வளைச்சு பிரச்சாரம் செய்து வந்தும், அரசியல் ஆதரவுகள் தனக்கு பலமாக இருந்தும் அந்த தேர்தலில் சந்தியா தோற்றுவிட்டார். ஆனாலும் அரசியல் தொடர்பை கடைசி வரை சந்தியா இழக்காமலேயே இருந்தாராம்!

    English summary
    Sandhya involved in Politics 2006 in Thoothukudi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X