சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூய்மைப் பணியாளருக்கு முத்துமாரிக்கு தமிழகத்தில் 3ஆவது தடுப்பூசி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் முத்துமாரிக்கு 3ஆவதாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் இன்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகின்றன. இதை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

Sanitary worker to be given first coronavirus drive in Tamilnadu

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் , 50 வயதுக்கு கீழ் இணை நோய்கள் உள்ளவர்கள் என 27 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.

100 பேர் வீதம் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் முத்துமாரி என்ற தூய்மை பணியாளருக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்தவர் முத்துமாரி.

36 வயதான முத்துமாரிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

2ஆவதாக ஐஎம்ஏ தேசிய தலைவர் ஜெயலாலுக்கும், 3ஆவதாக சுகாதாரப் பணியாளர் முத்துமாரிக்கும் செலுத்தப்பட்டது.

English summary
First to be given coronavirus drive in Tamilnadu is sanitary worker from Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X