சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என ஆயிரம்முறை சொல்வேன்... வைகோ ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: வட இந்தியர்களின் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என ஆயிரம்முறை சொல்வேன் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக அரசின் 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையான மொழி என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையானது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Sanskrit is dead language, says Vaiko

இதையடுத்து தவறான பாடம் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்த நிலையில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமஸ்கிருதம் என்பது இறந்து போன ஒன்று. அது இறந்து போன மொழிதான் என ஆயிரம் முறை தெரிவிப்பேன். இன்னமும் சொல்லப்போனால் வட மாநிலத்தவருக்கு புரியும்படி அது ஒரு டெத் லாங்குவேஜ் என்றே சொல்கிறேன்.

எடியூரப்பாவுக்கு வேலையை ஈஸியாக்கிய சபாநாயகர்.. 17 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்?.. பரபர பின்னணி!எடியூரப்பாவுக்கு வேலையை ஈஸியாக்கிய சபாநாயகர்.. 17 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்?.. பரபர பின்னணி!

தமிழைவிட சமஸ்கிருதம் ஒரு பழமையான மொழி என பாடப் புத்தகத்தில் திணித்தது யார்? அந்த கயவர் யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

English summary
MDMK General Secretary Vaiko said that Sanskrit is dead Language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X