சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்.. கமல்ஹாசனுடனான சந்திப்பு பின்னணி என்ன? சரத்குமார் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: கமலை திடீரென சந்தித்தது ஏன்…? விஷயத்தை விளக்கிய சரத்குமார்!

    அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியின், நிர்வாகிகளும், கமல்ஹாசனுடன் இன்று, சந்தித்து கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினர்.

    கமலுடனான சந்திப்புக்கு பிறகு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

    அதிமுக லேட்

    அதிமுக லேட்

    அதிமுகவில் காலம் கடந்தும் கூட்டணி குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களுடைய வாக்கு விகிதம் குறித்து தெரிந்துகொள்ள இந்த முடிவை எடுத்தோம். அதிமுகவோடு பேச்சுவார்த்தைக்கு காத்துக்கொண்டிருக்காமல் மக்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    காலில் விழுந்து

    காலில் விழுந்து

    தூய்மையான அரசியல் வேண்டும் என்று நினைக்கிறோம். தமிழக மக்களிடம் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் பணம் வாங்கொண்டு ஓட்டு போடாதீர்கள்.

    நல்லவர்களோடு

    நல்லவர்களோடு

    இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக-பாஜக இடையே இன்று காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    முயற்சிகள்

    முயற்சிகள்

    இறைவன் படைப்பில் எல்லோரும் நல்லவர்கள்தான். இருந்தாலும், ஒரே கருத்து உள்ளவர்கள் உடன் இணைவதைதான் நான் இப்படி குறிப்பிடுகிறேன். நேற்றிலிருந்து இதற்கான முயற்சியை தொடங்கி உள்ளோம். ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

    English summary
    Sarath kumar explained why he meets Makkal neethi maiyam party leader Kamal Hassan. He want to serve people of this state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X