சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோலி, பாண்ட்யா மேல தப்பு.. எதிர்பாராத இடத்திலிருந்து தோனிக்கு கிடைத்த 'சுப்ரீம்' சப்போர்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    WORLD CUP 2019 IND VS ENG | எதிர்பாராத இடத்திலிருந்து தோனிக்கு கிடைத்த ஆதரவு

    சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய உலக கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு தோனியின் நிதானமான ஆட்டம்தான் காரணம் என்று கங்குலி முதல், நெட்டிசன்கள் வரை விளாசி வருகிறார்கள்.

    ரன் ரேட் 12 தேவைப்படும் நிலையில், அதுவும் 5 விக்கெட்டுகள் கை வசம் இருந்த நிலையிலும், அடித்து ஆட முற்படாமல், தோனியும், கேதர் ஜாதவும், ஜாலியாக சிங்கிள் ஓடினர் என்று குற்றம்சாட்டுகிறார்கள் ரசிகர்கள்.

    ஆனால் விக்கெட் ஸ்லோவாக இருந்தது. அடித்து ஆடினாலும் எதுவும் நடந்திருக்காது. விக்கெட்டுகள் வேண்டுமானால் வீழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் சில கிரிக்கெட் பண்டிதர்கள்.

    மெதுவான ஆட்டம்

    மெதுவான ஆட்டம்

    எது எப்படியோ, தோனியின் ஆட்டம் தொடர்ந்து ஆமை வேகத்தில் இருப்பதாக எழும் குற்றச்சாட்டை மறுக்க முடியாது. ஆனால் நேற்றைய போட்டியில் தோனி மீது மட்டுமே தவறா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. துவக்கத்தில் ராகுல் 9 பந்துகளை சந்தித்து டக்அவுட்டானார். அப்போது முதலே, இந்தியா ஆமை வேகத்தில்தான் ஆடியது.

    ஓப்பனிங்கும் சரியில்லை

    ஓப்பனிங்கும் சரியில்லை

    பவர் பிளே இருந்தும், முதல் 10 ஓவர்களில், 30 ரன்களை கூட இந்தியா கடக்கவில்லை. ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் மெல்ல மெல்லதான் ஷாட்டுகளை ஆரம்பித்தனர். இருவருமே சற்று வேகம் எடுக்க ஆரம்பித்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டிவிட்டனர். பாண்ட்யா வந்த வேகத்தில், துணி துவைப்பதை போன்ற ஸ்டைலில் சில அருமையான பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் பிறகு கட்டை போட்டார்.

    கடைசி நேர நெருக்கடி

    கடைசி நேர நெருக்கடி

    இந்திய இன்னிங்சில் ஒரே ஒரு சிக்சர்தான் வந்தது. அது தோனி 50வது ஓவரில் விளாசிய சிக்சர் மட்டுமே. இருந்தாலும், கடைசி நேரத்தில்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அப்போதுதான் தோனி சிங்கிள் தட்டினார் என்பதுதான் அவர் மீது ரசிகர்கள் அதிகம் கோபப்பட காரணமாக அமைந்துவிட்டது.

    சரத்குமார் ஆதரவு

    அதேநேரம், சுப்ரீம் ஸ்டார், சரத்குமார், தோனிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். சரத்குமார் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: தோனி சிறப்பாக ஆடிக் கொண்டுள்ளபோதிலும், ஏன் அவரின் திறமை, தொடர்ந்து ஆராயப்படுகின்றது, என்பது எனக்குப் புரியவில்லை. நேற்றைய போட்டியில் கோலி, பாண்ட்யா 4 மற்றும் 6 ரன்களை (உண்மையில் அவர்கள் சிக்சர் அடிக்கவில்லை) அடிக்க முடிந்தது. ஆனால், ஏன் ரன் வீதத்தை அவர்களால் அதிகரிக்க முடியவில்லை. இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. அவர்களை விமர்சிக்க வேண்டாம், அவர்களுக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

    English summary
    I do not understand why Dhoni's abilities are in constant scrutiny when he is doing his best, yesterday's match were Kohli Pandya able to hit 4's and 6's,why couldn't they increase the run rate,Ind team is doing well let us not criticize,let us support, says actor R Sarath Kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X