சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சாதி" முத்திரை குத்தறாங்க.. எங்க தகுதிக்கேற்ப சீட் தரணும்.. இல்லாட்டி.. கெத்து காட்டும் சரத்குமார்

அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தன் மீது சாதி முத்திரை குத்துவதாக சமக தலைவர் சரத்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.. அத்துடன் தங்கள் தகுதிக்கேற்ப சீட் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒதுக்காவிட்டால் தனித்து நிற்கவும் தயங்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில - மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது.. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், புதிய கொடியையும், புதிய கரை வேட்டியையும் சரத்குமாரே அறிமுகப்படுத்தினார்.

 Sarathkumar criticized MK Stalin indirectly

பிறகு அவர் பேசும்போது, "சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை போலவே ஓரிரு கட்சி கொடிகள் இருக்கின்றன. அதனால், நம்மை தனித்துவமாக அடையாளப்படுத்தவே புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கட்சியின் பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சூரியவம்சம் படத்துக்கு அப்பறம், மக்களுக்கு சேவையாற்றதான் அரசியலுக்கு வந்தேன்... 1996-ல் அதிமுகவுக்கு எதிராக 40 நாட்கள் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டேன்... அப்போது திமுக ஆட்சிக்கு வர என்னுடைய பிரச்சாரம் தான் முக்கியமான காரணமாக இருந்தது.. இந்த 10 வருஷமாக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்... என் மனசில் பட்டதை அப்படியே வெளிப்படையாகவே பேசிவிடுவேன். துண்டு சீட்டில் எழுதிவைத்து கொண்டோ, அந்த சீட்டை பார்த்தும், தப்பாக படிக்கும் பழக்கமோ எனக்கு கிடையவே கிடையாது.

இப்போது வரை அதிமுக கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி இருக்கிறது... ஆனாலும் தேர்தல் நெருங்குவதால், எங்கள் கட்சிக்கு தொகுதி பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். அந்தவகையில் ஆலங்குளம், சங்ககிரி தொகுதிகளுக்கு நானும், வேளச்சேரி தொகுதிக்கு ராதிகாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறோம்... வருகிற 28-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்... தேர்தலில் நான் போட்டியிடுவது கடவுள், மக்கள் கையில்தான் உள்ளது.. மக்கள் சொன்னால் கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன்" என்றார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசும்போது, "சாதி அடிப்படையில் முத்திரை குத்தி என்னை ஒதுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.. சாதி உணர்வு இருந்தாலும், நான் எப்பவுமே சமத்துவ தலைவன் தான்... இந்தமுறை எந்த முடிவு கிடைத்தாலும் நாங்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்... ஆனால் அதிமுக கூட்டணியிலேயே இருக்கிறோம்.

நல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்! நல்லா பாருங்க.. கபில் தேவ், கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா.. மொத்தமா கலந்து எடுத்தா.. அடடே, நம்ம டீம்!

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு இன்னும் எங்களை கூப்பிடவில்லை.. கடந்தமுறை மாதிரி, ஓரிரு சீட் தந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம்.. எங்கள் தகுதிக்கேற்ப இடங்கள் தேவை... தனித்து நிற்பது தான் முடிவு என்றால், அதை செய்யவும் நாங்கள் தயங்கமாட்டோம்... ஆனால் இன்னும் டைம் இருக்கு.. அதேவேளை திமுகவுடன் கண்டிப்பாக நான் கூட்டணி வைக்கமாட்டேன்" என்றார்.

English summary
Sarathkumar criticized MK Stalin indirectly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X