சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பால் அரசுக்கு ஆபத்து இருக்காது...சொல்வது சரத்குமார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பால் அரசுக்கு ஆபத்து இருக்காது... சொல்வது சரத்குமார்!- வீடியோ

    சென்னை : தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பினால் அரசு கவிழ வாய்ப்பு இல்லை என்றே நினைப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் உணவகத்தில் வைல்டு டேல்ஸ் என்ற நகைச்சுவை மேடை நாடகத்தை பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

    Sarathkumars view on aftermath of 18 MLAs disqualification judgement

    இந்த மேடை நாடகம் தமிழ்நாடகம் மாதிரி அல்லாமல் அனைவரும் தங்கிலிஷில் பேசி நடித்துள்ளனர். வங்கி கொள்ளை பற்றியும், பிராட்வே மீயூசிக்கள், துப்பறியும் கதை, நகைச்சுவை கலந்த காதல் கதை என நான்கு வகையான கதை அமைப்புடன் இந்த மேடை நாடகம் கதையாக்கப்பட்டுள்ளது. இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய நடிகர் சரத்குமார் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாடகத்தில் நடித்துள்ளேன். "மீ டூ என்பது அனைவரிடமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையை மட்டும் சொல்லுங்கள், விளம்பரத்திற்காக எதையாவது சொல்லக்கூடாது.

    தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் குற்றசாட்டு உண்மையா இல்லையா என்பதை அவர்தான் கூறவேண்டும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை உடனடியாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து உண்மை என்ன என்பதை அவர் உடனடியாக நிரூபிக்கவேண்டும்.

    Sarathkumars view on aftermath of 18 MLAs disqualification judgement

    தேர்தலில் தனித்து போட்டியிடுவதையே விரும்புகிறேன், எங்களுடன் சேர்ந்து செயல்பட விரும்பினால் உயர்மட்ட குழுவுடன் ஆலோசித்து அந்த கட்சிகளை சேர்த்து கொள்ள தயாராக உள்ளோம்.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கேரளா அரசு சபரிமலை தீர்ப்பை மட்டும் நடைமுறை படுத்துவதில் ஆர்வம் காட்டுவது ஏன்?.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பினால் அரசு கவிழ வாய்ப்பு இல்லை என்றே நினைப்பதாக சரத்குமார் கூறினார்.

    English summary
    AISMK leader Sarathkumar hopes there is no fall for tn government after 18 MLAs disqualified case judgement too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X