சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சூப்பர்.. ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்".. சரத்குமார் பேச பேச.. மகிழ்ச்சி பொங்க பார்த்த ராதிகா!

நடராஜனுக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்.. சென்னைக்கு வந்தால் வாங்க, நாங்களும் உங்களை வந்து பார்க்கிறோம்.. உங்களுக்கு எங்க 2 பேருடைய வாழ்த்துக்கள்" என்று சமக தலைவர் சரத்குமாரும், ராதிகாவும் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.

சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த வீரர் நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர்..

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்... அன்றைய நாள் முழுவதும் மீடியாவின் பார்வையை தன்மீதே குவித்து வைத்திருந்தார் நடராஜன்.

 புது பாய்ச்சல்

புது பாய்ச்சல்

இதற்கு பிறகு திரும்பிய பக்கமெல்லாம் நடராஜனின் புகழ் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.. நாலாபுறம் இருந்தும் பாராட்டுகுவிய தொடங்கியது. சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜன், "கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும்.. இனி என்னை போல் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர விரும்புவர்" என்று சொன்ன அந்த வார்த்தை சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் ரத்தத்தில் புதிய தெம்பை பாய்ச்ச தொடங்கி உள்ளது.

நடராஜன்

இந்நிலையில், நடிகரும், சமக தலைவருமான சரத்குமார், தங்கராசு நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதிலும் செல்போன் வீடியோ காலில், நடராஜனை கூப்பிட்டு மனசார வாழ்த்து சொல்லி உள்ளார்.. இது சம்பந்தமான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் சரத்குமார் கையில் செல்போனை வைத்து கொண்டு, நடராஜனிடம் பேசி, சரத்குமார் தோளில் சாய்ந்து கொண்டு வாய் நிறைய சிரிப்புடன் நடராஜனை பூரித்து பார்க்கிறார் ராதிகா.

 முதலமைச்சர்

முதலமைச்சர்

அப்போது சரத்குமார் பேசும்போது, "நான் நிறைய இடத்துல உங்களை பத்திதான் பேசறேன்.. ஏன் பேசறேன்னு சொன்னால், நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால்கூட, இன்னொருத்தவர் வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்தவர் நடராஜன்னு சொன்னேன்.. செய்தியாளர்களிடம்தான் சொன்னேன்.. முதலமைச்சர் யார் வேணும்னாலும் ஆகலாம்.. திறமை இருந்தால் வரலாம்.. நடராஜனுக்கு திறமை இருந்தது, வந்தாரு..ன்னு உங்க பேர் யூஸ் பண்ணி பேட்டியில சொன்னேன்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

நேர்ல வரலாம்னு இருந்தேன்... அந்த டைம்ல நான் வாழப்பாடி பக்கத்துல இருந்தேன்.. உங்களை வந்து நாங்க 2 பேருமே பார்க்கலாம்னு இருந்தோம், ஆனால் நீங்க ஊர்ல இல்லைன்னு சொன்னாங்க.. பழனி போயிருக்கீங்கன்னு சொன்னாங்க.. உங்களுக்கு எதிர்காலம் இருக்கு.. ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்.. சென்னைக்கு வந்தால் வாங்க, நாங்களும் உங்களை வந்து பார்க்கிறோம் என்றார். உடனே ராதிகாவும், நடராஜனுக்கு வாழ்த்துக்களை சொல்கிறார். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

இன்றைய அரசியல் தலைவர்களும், உதாரணம் சொல்லி பேசும் அளவுக்கு நடராஜனின் புகழ் பெருகி வருகிறது இந்த தமிழகத்துக்கு கிடைத்த இன்னொரு பெருமை!

English summary
Sarathkumar wishes Cricket Player Natarajan, video goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X