சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்ணாசை.. பெண்ணாசை.. ஜீவஜோதி மீது பேராசை.. அது மட்டும் இல்லேன்னா.. ராஜகோபால் லெவலே வேற!

Google Oneindia Tamil News

Recommended Video

    Saravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ

    சென்னை: "அந்த" ஒரு விஷயம் மட்டும் இல்லேன்னா, அண்ணாச்சியின் லெவலே வேற மாதிரி இருந்திருக்கும். அப்படி அண்ணாச்சி விழுந்த அந்த விஷயம்தான் ஜோதிடம்! மண்ணாசையையும், பொண்ணாசையையும் விரட்டி விரட்டி செல்லும் அளவுக்கு ஜோதிடத்தில் வீழ்ந்து கிடந்தார் அண்ணாச்சி!

    கல்யாணம் ஆகி 2 மனைவிகள் இருந்தாலும், குடும்பத்தில் குட்டி குட்டி குழப்பங்களும், சின்ன சின்ன சிக்கல்களும் வந்து கொண்டே இருந்தன.

    அந்த பிரச்சனைகளுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்ப ஜோசியரை போய் சந்தித்தார் அண்ணாச்சி. அந்த ஜோசியரோ, "நீங்கள் இளம்பெண்ணை 3-வதாக கல்யாணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

    ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால் ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்

    50 வயசு

    50 வயசு

    வானளாவிய பணக்காரனாகி விடலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்" என்று சொல்லி உள்ளார். இப்படி ஜோசியக்காரர் சொல்லும்போதே அண்ணாச்சிக்கு வயசு 50-க்கு மேல் ஆகிவிட்டது. இளம்பெண்ணை யார் முன்வந்து கட்டி தருவார்கள்? எங்கெங்கோ தேடினார். கடைசியில் தான் ஓட்டலில் வேலை பார்க்கும் மேனேஜரின் மகளே கண்ணில் சிக்கினார்.

    கொலை

    கொலை

    அந்த பெண் ஒருவரை காதலிப்பது தெரிந்ததும், காதலித்தவரையே கல்யாணம் செய்து கொண்டது தெரிந்தும், பணத்தாசையை பெற்றோரிடம் காட்டினார் அண்ணாச்சி. சில சொத்துக்களை கூட தருவதாக வாக்கு தந்தார் அண்ணாச்சி. பெற்றோர் மசிந்தனர்.. பெண் மசியவில்லை. கட்டிய கணவனிடமே மனைவியை விட்டுத்தரும்படி வாய்கூசாமல் கேட்கும் அளவுக்கு வயசை மீறி நடந்து கொண்டார் அண்ணாச்சி. அதன்பிறகும் பணப்பேய் அவரை ஆட்டு ஆட்டு என ஆட்டுவித்தது.

    பணபலம்

    பணபலம்

    தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர், ஒரு பிரபல நபர், 50 வயதை தாண்டிய பெரிய மனுஷன் என்ற சமாச்சாரத்தை எல்லாம் தூக்கி எறிந்து கொலை திட்டத்துக்குள் தன்னை ஆட்படுத்தி கொண்டார்.. அதை நிறைவேற்றவும் செய்தார்! கோர்ட் படியை முதன்முதலாக ஒரு பெண்ணுக்காக ஏறினார் அண்ணாச்சி. பணபலம், செல்வாக்கால் பலமுறை வந்தாலும், ஜீவஜோதி தந்த சாட்சியம் அவரை சுக்குநூறாக நொறுக்கி விட்டது.

    உறவு

    உறவு

    தன்னை காட்டியே தர மாட்டார் என்று நம்பிய நேரத்தில் "என் கணவருடன் என்னை அண்ணாச்சி சேரவே விடவில்லை. அவருடன் உறவு வெச்சிக்ககூடாது என்று சொன்னார், என் கணவருக்கு எய்ட்ஸ் என்றார், எனக்கு பல வகையில் தொந்தவு தந்தார், கடைசியில் என் புருஷனை கொன்றே விட்டார்" என்று சாட்சியம் தரவும் அப்போதுதான் தண்டனைவாசம் அண்ணாச்சியை நெருங்கியது.

    உணர்ச்சிகள்

    உணர்ச்சிகள்

    பிரமிக்கத்தக்க வளர்ச்சி இருந்தால்தான் என்ன.. கோடி கோடியாய் பணம் கொட்டி கிடந்தால்தான் என்ன, செல்வாக்கும் புகழும் குவிந்து கிடந்தால் என்ன, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நாசம் செய்து கொண்டார் அண்ணாச்சி.

    பாடம்

    பாடம்

    ஒருவேளை அண்ணாச்சி அந்த ஜோதிடரை சந்திக்காமல் இருந்திருந்தால்... ஒருவேளை அண்ணாச்சி கண்ணில் ஜீவஜோதி படாமல் இருந்திருந்தால்... ராஜகோபால் என்ற சாம்ராஜ்யத்தை யாராலும் தொட்டு பார்த்திருக்க கூட முடியாது. அளவுக்கு அதிகமாக ஆசைப்படற ஆண் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்பதை அண்ணாச்சியின் மரணம் மக்களுக்கு உணர்த்தி சென்று இருக்கிறது.

    English summary
    Saravana Bhavan Annachi Rajagopal lost his life because of only greed and Jeevajothi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X