சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயல் நிவாரணம்.. ரூ. 1 கோடி நிதியை அள்ளி கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ்!

1 கோடி ரூபாயை கொடுத்தது சரவணா ஸ்டோர்ஸ் தந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ. 1 கோடி நிதியை அள்ளி கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ்!

    சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி இன்று வழங்கப்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி 3 தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி தனியார், அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள்.

    [அரிசியில் புழுக்கள்.. பழைய பிரெட்.. கிழிந்த துணிகள்.. அரசு இதுக்கு நிவாரணம் கொடுக்காமலே இருக்கலாம்!]

    உரிமையாளர் அருள்

    உரிமையாளர் அருள்

    அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரண நிதியினை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

    வைரல் விளம்பரங்கள்

    வைரல் விளம்பரங்கள்

    தற்போது டிவி-க்களில் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது சரவணா ஸ்டோர் விளம்பரங்கள்தான். பெரிய பெரிய நடிகர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், திடீரென தன் கடை விளம்பரத்தில் மாடலாக தானே களமிறங்கி அசத்தியவர் சரவணா ஸ்டோர் ஓனர் அருள். இவர் நடித்த விளம்பரங்கள் எல்லாமே வைரலாகின. இவர் விளம்பரங்களில் நடிக்க தொடங்கியது முதலே சினிமா உலகிலும் தன் கவனத்தை செலுத்த தொடங்கினார்.

    நெட்டிசன்கள் கோபம்

    நெட்டிசன்கள் கோபம்

    நடிகர் சங்க கட்டிட நிதிக்காக மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் இரண்டரை கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்தார். இதற்கு நெட்டிசன்கள் இவர் மீது கோபித்துகொண்டனர். "சினிமாக்காரங்களுக்கு இல்லாத பணமா, இவ்வளவு பணத்தை இல்லாதவங்களுக்கு தந்து உதவியிருக்கலாம் இல்லை?" என்று கருத்துக்களையும் பதிவிட்டனர்.

    1 கோடி ரூபாய்

    1 கோடி ரூபாய்

    இதனை மனதில் கொண்டோ, அல்லது முதல்வரின் வேண்டுகோளை ஏற்றோ, தற்போது அருள் கஜா புயல் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாயை அளித்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு இந்த 1 கோடி ரூபாயை வழங்கி உள்ளதாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடமும் அருள் அறிவித்தார்.

    English summary
    Saravana Store Owner Arul Rs 1 crore Gaja relief fund to the Chief Minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X