சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டுச்சேலை மடிப்புலனா கிரங்கி போனேண்டி.. இந்திய அளவில் வைரலாகும் தமிழக பெண் ரோபோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சிவப்பு மற்றும் பச்சை நிற பட்டுச்சேலை அணிந்த பெண் ரோபோ ஒன்று ஷோரூமிற்கு வருபவர்களுக்கு தேடி தேடி சென்று சானிடைசர் வழங்குகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஜவுளி கடையில் பட்டுச்சேலை அணிந்த பெண் ரோபோ.. வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மனித தொடர்பைக் குறைக்க பல்வேறு இடங்களில் பல ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சிங்கப்பூரில் ஒரு ரோபோ நாய் முதல் சென்னையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ரோபோக்கள் வரை, சமூக ஊடகங்களில் கடந்த சில மாதங்களில் பல தனித்துவமான இயந்திரங்கள் தென்பட்டன. இருப்பினும், பட்டுச்சேலை அணிந்த பெண் ரோபோ உங்கள் முன் அருகே வந்து சானிடைசர் வழங்கியதை பார்த்திருக்கிறீர்களா.. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     ஆக்சிஜன் இல்லை.. கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து.. 45 நிமிஷம் துடிதுடித்து.. தெலுங்கானா ஷாக்! ஆக்சிஜன் இல்லை.. கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து.. 45 நிமிஷம் துடிதுடித்து.. தெலுங்கானா ஷாக்!

    சானிடைசர் தருகிறது

    சானிடைசர் தருகிறது

    தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சிவப்பு மற்றும் பச்சை நிற பட்டுச்சேலை அணிந்த பெண் ரோபோ ஒன்று ஷோரூமிற்கு வருபவர்களுக்கு தேடி தேடி சென்று சானிடைசர் வழங்குகிறது. இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் மற்றும் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா உள்ளிட்டோர் ட்விட்டர் பகிர்ந்துள்ளனர்

    சரியான பயன்பாடு

    சரியான பயன்பாடு

    சுதா ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள ஜவுளி ஷோரூம் ஒன்றில் தொழில்நுட்பம் சரியான பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக பாராட்டினார். ஒரு தானியங்கி ரோபோ வாடிக்கையாளர்களைச் சுற்றிலும் கண்டறிந்து, சானிடைசரை வழங்குவதுடன் அவர்களை தேடி செல்கிறது என்று கூறியிருந்தார். 44 விநாடிகள் உள்ள அந்த வீடியோ டுவிட்டர் தளத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலர் தமிழகத்தில் உள்ள ஜவுளி கடையின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ரோபோவின் செயல்

    ரோபோவின் செயல்

    ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் தலைவரான கோயங்காவும் இந்த கண்டுபிடிப்பைப் பாராட்டினார் - ரோபோ சானிடிசரை விநியோகித்தது மட்டுமல்லாமல், ஷோரூமின் சேலை விற்பனைக்கு ஒரு மாதிரியாகவும் செயல்படுகிறது என்று கூறினார், அவரது பதிவை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

    சிங்கப்பூரில் அசத்தல்

    சிங்கப்பூரில் அசத்தல்

    தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் பல ரோபோக்கள் உணவு வழங்குவதற்கும், சுகாதார சோதனைகளை நடத்துவதற்கும், இடங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க மக்களை நினைவுபடுத்துவதற்காக சிங்கப்பூரில் அதிகாரிகள் ஒரு ரோபோ நாயை உருவாக்கினர். இதேபோல் , தமிழ்நாட்டில் உள்ள ஒரு கணினி பொறியாளர், அவருக்காக வரிசையில் நிற்க ஒரு ரோபோவை உருவாக்கி ஆச்சர்யப்பட வைத்தார்.

    கொரோனாவால் கற்றது

    ஒவ்வொரு பிரச்சனைகளும் மனிதனுக்கு வாழ்வதற்கான புதிய யோசனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி தருகிறது. தொழில்நுட்பங்களும், அறிவியிலும் மனிதனுக்கு உறுதுணையாக உள்ளன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு புதிய தொழில்நுட்பத்தையும் பாதுகாப்பு யுக்திகளையும் மனிதனுக்கு வழங்கி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ஆக்சிஜன் இல்லை.. கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து.. 45 நிமிஷம் துடிதுடித்து.. தெலுங்கானா ஷாக்!

    English summary
    Technology put to right use at one of the textile showrooms in TN. An automated mannequins draped in saree detects customers around and walks to them to provide sanitisers. Post Corona is sure to see intensified technological evolutions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X