சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராடி வெற்றி.. விஜய்க்கு கூட ஒருவகையில் நெருக்கம்தான்.. யார் இந்த வருண் ராஜேந்திரன்!

உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் - சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உண்மையை ஒப்புக்கொண்ட முருகதாஸ்... சர்க்கார் தடை நீங்கியது- வீடியோ

    சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் - சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

    இதனால் முருகதாஸ் தரப்பு வருணுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல் படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வருண் ராஜேந்திரன் யார் என்று எல்லோரும் தேடி வருகிறார்கள்.

    ரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி! ரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி!

    அப்போதே எழுதினார்

    அப்போதே எழுதினார்

    துணை இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் 2004ல் இந்த கதையை எழுதி இருக்கிறார். அரசியல் ஆர்வம் கொண்டு இவர் எழுதிய சில முக்கிய கதைகளில் செங்கோல் கதையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கதை திருடப்படாமல் இருப்பதற்காக தென்னிந்திய கதையாசிரியர்கள் சங்கத்தில் கதையை 2004 இறுதியில் பதிவு செய்துள்ளார்.

    விஜய்க்கு எழுதியது

    விஜய்க்கு எழுதியது

    இந்த படத்தின் கதையை விஜய்க்குத்தான் வருணும் எழுதியுள்ளார். ஆனால் இவர் இயக்குனராக வளராததால் முதல் படமே விஜயை வைத்து எடுக்க முடியாது என்று பின்பு இயக்கிக் கொள்ளலாம் என்று விட்டுள்ளார். பதிவு செய்த கதை பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது அடுத்தடுத்த பணிகளை செய்துள்ளார்.

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    இவர் கோலிவுட்டில் கடந்த 15 வருடமாக உள்ளார். இதில் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சில படங்களில் இணை இயக்குனராக இருந்துள்ளார். சில படங்களில் ஸ்கிரிப்ட் வேளைகளில் வேலை பார்த்து இருக்கிறார். சில முக்கிய இயக்குனர்களிடம் பணியாற்றி உள்ளார்.

    யாரிடம்

    யாரிடம்

    இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இவர் விஜய்யின் அப்பாவிடம் சினிமா கற்றவர். விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரிடம் இவர் உதவி இயக்குனராக இரண்டு படங்களில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா தொடர்பான பல விஷயங்களை அவர்தான் கற்றுக்கொடுத்துள்ளார்.

    விஜய்க்கு தெரியாது

    விஜய்க்கு தெரியாது

    இந்த கதை திருடப்பட்டது என்று விஜய்க்கு தெரியாது என்று கூறப்படுகிறது. அதே சமயம் இன்னும் சில நாட்களில் விஜயை வருண் சந்திக்க போகிறார் என்று தகவல் வருகிறது. மரியாதை நிமித்தமாக இருவரும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

    நெருக்கமானவர்

    நெருக்கமானவர்

    இவர் சினிமாவில் இத்தனை வருடமாக வேலை பார்த்த காரணத்தால் கதை எப்படி வெளியானது என்று பலருக்கும் புரியவில்லை. ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் வருண் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக இந்த கதை வெளியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Sarkar Stroy Controversy: Varun Rajendiran gets the huge success in piracy issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X