சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேக் வெட்டியதிலும் சர்கார் சர்ச்சை.. இங்கேயும் அதிமுக இலவசங்கள் மட்டும்.. திமுக இலவசங்கள் எங்கேப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்கார் கொண்டாட்டத்தில் விஜய் வெட்டிய கேக்- வீடியோ

    சென்னை: சர்கார் திரைப்படத்தில் இலவச மிக்ஸி, பேன், கிரைண்டரை எரிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்தக் காட்சிகள் கட் செய்யப்பட்டு மறு தணிக்கைக்குப் பின்னர் மீண்டும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா சர்ச்சைக்கும் புல்ஸ்டாப் வெச்சாச்சுன்னு பாத்தா நேற்று சர்கார் டீம் கேக் வெட்டி வெற்றி கொண்டாட்டம் நடத்தியுள்ளனர். இந்த கேக்கில் சுற்றி வைக்கப்பட்டிருந்த இலவச பொருட்களில் வண்ண தொலைக்காட்சி பெட்டி இடம்பெறாதது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    நிகழ்கால அரசியலை சொல்லும் படம், அரசியல்வாதிகள் யாருமே யோக்கியம் இல்லை. மக்களின் பிரச்னைகளை எந்த அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை, எதிர்த்து கேள்வி கேட்கவே யாரும் இருக்கக் கூடாது என நினைக்கிறது அரசு என்று வசனத்திலும் காட்சியிலும் அரசியல் அவலம் பற்றி கோவம் கொப்பளிக்க பேசியும் நடித்தும் இருக்கிறார் விஜய்.

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைத் தான் இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது என்று சர்கார் படக்குழு சொல்கிறது. ஆனால் இதில் சிக்கலே திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்திற்கு தயாரிப்பு செய்திருப்பது தான். அரசியல் கட்சியினர் மற்றும் அரசின் இலவசங்களுக்கு படத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

    இலவச மிக்ஸி, கிரைண்டர் எரிப்பு

    இலவசங்களுக்கு எதிர்ப்பு என்று சொல்லி தமிழக அரசு கொடுத்த மிக்ஸி, கிரைண்டர், பேனை தீயில் தூக்கிப் போட்டு கொளுத்துவது போல காட்சியமைத்துள்ளனர். அந்தக் காட்சியில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே வந்து இலவச மிக்ஸியை நெருப்பில் தூக்கிப் போடுவார். இந்தக் காட்சிகளுக்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    அதிமுக எதிர்ப்பு

    அதிமுக எதிர்ப்பு

    ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்பட்ட இலவசங்களை தீயில் போட்டு அவமானப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் படம் என்பதால் மற்ற அரசியல் கட்சிகள் அமைதியாக இருந்த போதும் தானாக ஆஜராகி அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் போராடியது அதிமுகவினர் அல்ல உண்மையான மக்கள் என்று மார்தட்டிக் கொண்டனர் அதிமுகவினர்.

    சர்கார் வெற்றிக் கொண்டாட்டம்

    சர்கார் வெற்றிக் கொண்டாட்டம்

    நவம்பர் 5ல் ரிலீஸான சர்கார் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகளைக் கண்டு 5 சீன்கள் கட், 2 மியூட்களுடன் மறுதணிக்கை செய்யப்பட்டு தியேட்டர்களில் அமைதியான முறையில் ஓடி வருகிறது. இந்நிலையில் சர்கார் படக்குழுவினர் நேற்றைய தினம் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர்.

    கேக் வெட்டியதிலும் கிளம்பிய சர்ச்சை

    கேக் வெட்டியதிலும் கிளம்பிய சர்ச்சை

    இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய், நடிகை வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தின் போது வெட்டப்பட்ட கேக் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இலவச டிவி இல்லையே

    இலவச டிவி இல்லையே

    சர்கார் வெற்றி கொண்டாட்டம் என்று வாசகம் எழுதப்பட்டுள்ள அந்த கேக்கை சுற்றியும் இலவச மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை கேக் வடிவில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இலவசங்களை எதிர்ப்பது என்றாகிவிட்டால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டியையும் சேர்த்து அதில் வைக்க வேண்டியது தானே, அதை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள் என்று மீண்டும் ஒரு பூதம் கிளம்பியுள்ளது.

    ஒரு வேளை இதுவும் விளம்பரமா

    ஒரு வேளை இதுவும் விளம்பரமா

    வேலியில போற ஓணான இவர்களாக எடுத்து ஏன் மடியில் விட்டுக் கொள்கிறார்கள். ஒரு வேளை இதுவும் ஒரு வகை விளம்பரமோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

    English summary
    Sarkar team's yesterday successful celebration creates anpother criticism as the cake is icing with freebies Mixie, grinder but not DMK's colour television.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X