சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் இருந்து விலகிய சமக...திமுகவில் இருந்து விலகிய ஐஜேகே - உருவானது புது கூட்டணி

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஐஜேகே உடன் கூட்டணி அமைத்துள்ள சரத்குமார் இந்த கூட்டணிக்கு கமல், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி- சமத்துவ மக்கள் கட்சி இடையே புது கூட்டணி உறுதி ஆகியுள்ளது. இந்த கூட்டணிக்கு விஜயகாந்த், கமலும் வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது.

எதிர்கட்சி வரிசையில் உள்ள திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து எந்த கட்சிகளிடமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

ஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவில் இருந்து சரத்குமார் விலகல்

அதிமுகவில் இருந்து சரத்குமார் விலகல்

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என சரத்குமார் தெரிவித்திருந்தார். திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார் சரத்குமார். அப்போதே அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் விலகி அமமுக உடன் கூட்டணி சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சரத்குமார் புது கூட்டணி

சரத்குமார் புது கூட்டணி

புதிய திருப்பமாக அதிமுகவில் இருந்து விலகிய சரத்குமார், ஐஜேகே உடன் கூட்டணி அமைத்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது ஐஜேகே திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார்.

திமுகவில் இருந்து ஐஜேகே விலகல்

திமுகவில் இருந்து ஐஜேகே விலகல்

இந்த சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து களமிறங்கும் திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில்தான் திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே வெளியேறி புதிய கூட்டணி அமைத்துள்ளது.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

ஐஜேகே உடன் சமக சரத்குமார் இணைந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார். புதிய கூட்டணியில் கமல்ஹாசன், விஜயகாந்த் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தவிர்த்து நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அமமுகவின் டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார்.

மநீம ஆம் ஆத்மி கட்சி

மநீம ஆம் ஆத்மி கட்சி

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியுள்ள கமல் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகிறார்.

ஐஜேகே சமக

ஐஜேகே சமக

இந்த நிலையில் தற்போது புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் வேறு எந்த கட்சிகள் வந்தாலும் இணைத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து. இந்த கூட்டணியால் எந்த கட்சிக்கு பாதிப்பு வரும்? எந்த கூட்டணியில் பி டீமாக இந்த அணி செயல்படப்போகிறது என்று சில நாட்களில் தெரிந்து விடும்.

English summary
With the date of the Assembly elections announced in TamilNadu, a new alliance between the Samathuva Makal Katchi and the Indhiya Jananayaka Katchi (IJK) has been confirmed. Sarathkumar has called on Vijaykanth and Kamal to join the alliance. A new alliance has been formed in Tamil Nadu with the announcement of assembly elections on April 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X