சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா?

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா?- வீடியோ

    சென்னை: போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவரது அண்ணன் மனைவி இளவரசி. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வசிந்து வந்தனர்.

    இதனால் அவர்களது வாக்காளர் அடையாள அட்டைகளும் போயஸ் கார்டன் இல்ல முகவரியிலேயே இருந்தது. கடைசியாக இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இருவரும் சென்று வாக்களித்தனர்.

    பெங்களூர் சிறை

    பெங்களூர் சிறை

    இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரசு நினைவிடம்

    அரசு நினைவிடம்

    நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை என்பதால் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் போயல் கார்டன் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

    பெயர்கள்

    பெயர்கள்

    இந்த நிலையில் இப்போதைக்கு யாரும் வசிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதிலும் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.

    விண்ணப்பம்

    விண்ணப்பம்

    சசிகலா முதல்வராக கனவு கண்டார். அதுதான் பலிக்கவில்லை என்றால், அவரது வாக்குரிமையும் பறி போய்விட்டது. சிறையில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாது. எனினும் 2021-ஆம் ஆண்டு அவர்கள் வெளியே வந்து முகவரி சான்றிதழை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்து புதிதாக பெற்றால்தான் உண்டு.

    English summary
    Sasikala and Ilavarasi's name removed from Voter list as there are not residing at Poes Garden house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X