• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜெயலலிதா பிறந்தநாள்: சசிகலா ஆட்டம் இன்றுமுதல் தொடங்குமா? உஷார் மோடில் அதிமுக

|

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக முன்னெடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக மற்றும் வி.கே.சசிகலா இடையிலான மோதல் எதிர்வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இன்று (பிப்.24) முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள். நிறைய அரசியல் சதுரங்கள் விளையாட்டுகளை இன்றிலிருந்து கூட எதிர்பார்க்கலாம்.

sasikala expects to start her politics game in jayalalithaa 73rd birth anniversary

இரு முகாம்களும் ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கிற்கு உரிமை கோர முயற்சிக்கும். தமிழக முதல்வரும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

இ.பி.எஸ்ஸின் இந்த நடவடிக்கை, 'நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு' என்று சசிகலா முகாமுக்கு ஒரு செய்தியை அனுப்புவதாக அமைகிறது.

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னையில் பிரமாண்டமாக நுழைந்து தற்போது வரை அமைதி காத்து வரும் சசிகலா, இன்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவார். எவ்வாறாயினும், இது சசிகலாவுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு இல்லத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் நினைவுச்சின்னம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட பின்னரே அவர் அங்கு செல்வார் என்று சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுறுசுறுப்பாக அரசியலில் களமாடவும், அதிமுகவை மீட்டெடுக்கவும் சசிகலா தெளிவாக உள்ளார். இருப்பினும், அவரது அரசியல் திட்டங்கள் பிப்ரவரி 24 க்குப் பிறகுதான் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தம்பரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். அதேசமயம், நாளை (பிப்.25) அவரது அமமுக கட்சியின் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். அதிமுகவை மீட்டெடுப்பதே சசிகலாவின் நோக்கம் என்பதால், அவர் அமமுக கட்சியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்.

சசிகலாவுக்கு தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவார் - ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து

கட்சியின் பொதுச் செயலாளராக தனது பதவியை மீட்டெடுப்பதே அவரது முதல் படி. இந்த வழக்கை எதிர்த்துப் போராட அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், மேலும் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக தாங்கள் தைரியமாக இருப்பது போன்று காட்டிக் கொள்ளலாம். ஆனால் கட்சி பதட்டமாக இருக்கிறது. சசிகலா சென்னை திரும்பியதிலிருந்தே அமைதியாக இருந்து வருகிறார், ஆனால் மெரினாவில் ஜெயலலிதா நினைவுச்சின்னத்தை அரசு மூடுவதற்கு, சசிகலா சென்னையில் தொடர்ந்து இருப்பதே காரணமாக அமைகிறது.

2021 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்குமாறு அதிமுக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 
 
 
English summary
jayalalithaa 73rd birth anniversary - ஜெயலலிதா பிறந்தநாள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X