• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இன்னும் 4 நாள்தான்.. வெடிக்கிறது பிரச்சனை.. சசிகலாவை சந்திக்க போகும் அந்த முக்கிய "புள்ளி" யார்?!

|

சென்னை: சசிகலா ஏன் அமைதியாக இருக்கிறார்? என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர் சென்னையை விட்டே செல்ல போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.. தன்னுடைய அரசியல் நகர்வை தஞ்சாவூரில் இருந்தே கிளப்ப அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா சென்னை வந்து 5 நாள் ஆகிறது.. அவர் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை.. எந்த முக்கிய பிரமுகரும் அவரை சென்று சந்திக்கவும் இல்லை.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனையும் நடக்கவில்லை.. அதனால் அவரது அரசியல் என்பது மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், சசிகலா தஞ்சாவூருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.. வரும் 17-ம் தேதி தஞ்சாவூருக்கு சென்று, முக்கியமான சொந்தக்காரர்களை சந்திக்க போகிறாராம்.. அங்கேயே ஓய்வெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு பின்பு மிகப்பெரிய அரசியல் மூவ் உள்ளதாகவே கருதப்படுகிறது.

 தஞ்சாவூர்

தஞ்சாவூர்

10 நாட்களுக்கு தஞ்சாவூர் பிளான் செய்திருக்கிறார் சசிகலா.. அங்கு கணவர் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்.. பிறகு நிர்வாகிகள் சிலரையும் அவர் சந்திக்கலாம் என்கிறார்கள்.. இதைதவிர, வரும் 25ம் தேதி அதாவது ஜெயலலிதா பிறந்த நாள் முடிந்து அடுத்த நாளே, அமமுகவை சேர்ந்த 5 நிர்வாகிகள் டெல்லிக்கு செல்ல ஒரு பிளான் வைத்திருக்கிறார்கள்.. இது எதற்காக என்று தெரியவில்லை. இந்த 4 வருட காலத்தில் சசிகலாவின் விசுவாசிகள் தென் மாவட்டங்கள் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.

 வரவேற்பு

வரவேற்பு

அமமுகவின் ஒவ்வொரு தேர்தலின்போதும், அந்த கட்சிக்கு வாக்குகளை அள்ளி தந்ததும் 3-வது கட்சியாக தினகரனை அங்கீகரிக்க செய்ததும் இதே தென்மாவட்ட மக்கள்தான்.. இப்போதுகூட இங்குள்ள செல்வாக்கை பார்த்துதான், பாஜக அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க விரும்புகிறது.. சென்னை வந்த சசிகலாவை வரவேற்றதில் பெரும்பாலானவர்கள், சொந்த சமுதாய மக்களே ஆவர்.. "தாய்வீட்டு சீதனம்" என்று அன்றைய தினம் வரவேற்க வந்தவர்களை பார்த்து சசிகலா பூரித்து போனதும் இதை கண்டுதான்.

புள்ளிகள்

புள்ளிகள்

இப்போது, சசிகலா தஞ்சை சென்றிருப்பதால், அவரது சமூகத்தை சேர்ந்த ஒருசில புள்ளிகள் அவரை சந்திக்க அப்பாய்ன்மென்ட் கேட்டுள்ளனராம்.. அதனால், அவர்களுடன் நிச்சயம் சசிகலா ஆலோசிக்கக் கூடும் என்று தெரிகிறது.. மேலும், அதிமுக, அமமுக தொண்டர்களையும் நேரில் சந்தித்து பேசும்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தஞ்சை சென்றுவிட்டு வந்துவிட வேண்டும் என்பதே முக்கிய எண்ணமாக உள்ளது.

பயணம்

பயணம்

ஆனால், இதிலும் சில சிக்கல்கள் எழக்கூடும்.. இதுவரை கொடி இல்லாத காரில் எங்குமே சசிகலா பயணித்தது இல்லை.. அப்படி இருக்கும்போது, தான் சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் காரில், அல்லது தென்மாவட்டத்துக்குள்ளேயே எங்காவது காரில் செல்ல நேர்ந்தால், எப்படி செல்வார்? காரில் கொடியை கட்டினால் மறுபடியும் பிரச்சனை எழுமே? என்ற சந்தேகங்களும் வருகின்றன.

பிரச்சனை

பிரச்சனை

அதுமட்டுமல்ல, ஜெயலலிதா காரை யாருமே பயன்படுத்தக்கூடாது என்று பல்வேறு தரப்பில் அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சசிகலா எந்த காரில் செல்வார்? தான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முடிவில் இருக்கும் அவர் ஜெயலலிதா கார் இல்லாமல் செல்ல வாய்ப்பே இல்லை என்று கருதப்படும் நிலையில், இந்த கேள்வி அவசியமாக எழுகிறது. எப்படியோ, இன்னும் 4 நாளில் இன்னொரு பரபரப்பு காத்து கொண்டிருக்கிறது!

 
 
 
English summary
Sasikala going to Thanjavur soon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X