சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்... ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்... சசிகலா அதிரடி பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா கூறினார்.

Recommended Video

    சென்னை: அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும்... ஜெ.பிறந்தநாளில் சசிகலா வேண்டுகோள்!

    தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது . இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்றும் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.

    சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சசிகலா விடுதலை

    சசிகலா விடுதலை

    சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். பெங்களூரு முதல் சென்னை வரை அவருக்கு வரலாறு காணாத வரவேற்பை அமமுக தொண்டர்கள் கொடுத்தனர். சசிகலா சென்னை வரும் வேளையில் காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தார்.

    முதல்வர் தாக்கு

    முதல்வர் தாக்கு

    இதற்கு அதிமுகவினர் பல்வேறு கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகு முதல்வர் சசிகலாவை கடுமையாக தாக்கி பேசினார். அமைச்சர்கள் சிலரும் சசிகலாவை தாக்கினார்கள். டிடிவி தினகரனும் முதல்வர், அமைச்சர்களை பேசினார். சென்னை வந்த சசிகலா வீட்டுக்குளேயே இருந்தார். அவர் தொண்டர்களை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து வந்தது.

    ஜெயலலிதா படத்துக்கு மரியாதை

    ஜெயலலிதா படத்துக்கு மரியாதை

    இந்த நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டப்படுகிறது. இதனால் சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஜெயில் தண்டனை முடிந்து சசிகலா பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது டிடிவி தினகரன், வெங்கடேசன், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அங்கு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா கூறியதாவது:-

    ஒன்றாக இனணந்து தேர்தல் சந்திப்போம்

    ஒன்றாக இனணந்து தேர்தல் சந்திப்போம்

    கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன் அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம்.

    ஜெயலலிதா இலக்கு

    ஜெயலலிதா இலக்கு

    நம்முடைய இலக்கு நமது புரட்சித்தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்ற, மீண்டும் தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதே ஆகும். எனவே அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் .

    விரைவில் தொண்டர்கள் சந்திப்பேன்

    விரைவில் தொண்டர்கள் சந்திப்பேன்

    அதில் நாம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது . இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்று சசிகலா கூறினார்.

    English summary
    Sasikala said that the real siblings of the revolutionary leader will meet together in the Tamil Nadu Assembly elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X