சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சி வழக்கு.. கோர்டை நாடிய ஓபிஎஸ், இபிஎஸ்.. சசிகலாவுக்கு நோட்டீஸ்.. இனி என்னாகும்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ், இபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவிற்கு சசிகலா பதில் தர சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொது செயலாளராக வி.கே. சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடந்தது.

சசிகலா வழக்கு

சசிகலா வழக்கு

அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேறியது. மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் பொதுக்குழு தேர்வு செய்தது. இந்நிலையில், பொதுச்செயலாளரின் அனுமதி இல்லாமல் அதிமுக நடத்திய பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது. தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி இருந்தார்கள்.

சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம்

சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம்

இந்த வழக்குகள் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரனைக்கு வந்தபோது, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

விசாரணை ஒத்திவைப்பு

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்கமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

English summary
OPS and EPS have filed a petition against the AIADMK general body meeting seeking cancellation of Sasikala's case. The Chennai City Civil Court has ordered Sasikala to respond to the petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X