சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரை விட்டு கீழே இறங்காத சசிகலா.. தி.நகர் வீட்டு கதவை அடைத்து.. உள்ளே கேட்ட "அந்த" சத்தம்

சசிகலா வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா அன்னைக்கு சென்னை வந்தார் இல்லையா, அப்போது வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும், கீழே இறங்கவே இல்லையாம்.. காருக்குள்ளேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கிறார்.. பிறகு வீட்டுக்குள் நுழைந்ததுமே கதவை சாத்திவிட்டு உள்ளே ஏகப்பட்ட விசேஷங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா ரிலீஸ் ஆகிவிட்டார்.. கடந்த 8-ம் தேதி, ரோடு ஷோ நடத்தி.. டிராபிக் ஜாம் ஏற்படுத்தி சென்னை தி.நகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. அதோடு சரி.. இன்றுதான் வாய் திறந்துபேசி உள்ளார்.. விரைவில் தொண்டர்களையும் சந்திப்பதாக சொல்லி உள்ளார்.

ஆனால், சென்னை வந்து இத்தனை நாள் ஆகியும், மிக முக்கிய நிர்வாகிகள் யாரையும் சந்தித்து பேசவில்லை.. ஆலோசனையும் நடத்தவில்லை.. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.. எனினும் ஏதோ ஜாக்கிரதையான காய் நகர்த்தல் மட்டும் நடந்து வருவதாக கணிக்கப்பட்டு வந்தது.

வரவேற்பு

வரவேற்பு

கடந்த 8-ம் தேதி, சசிகலா வரப்போகிறார் என்பதற்காக., தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீடு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.. அந்த வீடு சசிகலா வரப்போகிறார் என்பதற்காக ஜரூர் ஏற்பாட்டில் தயாரானது.. கிட்டத்தட்ட 23 மணி நேரம் பயணம் செய்து தி.நகர் வீட்டிற்கு விடிகாலை வந்து சேர்ந்தார் சசிகலா.. வீட்டின் முன்பு பூவினால் அலங்கரிக்கப்பட்ட கோலம் போடப்பட்டிருந்தது..

 வாசல் கோலம்

வாசல் கோலம்

ஒரு பசுவும் கன்றுக்குட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலா காரை விட்டு உடனே கீழே இறங்கவில்லையாம்.. கொஞ்ச நேரம் காருக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார்.. அந்த பசுவையும், கன்றையும், வாசல் கோலத்தையும், பூக்களையும் கவனித்தபடியே உட்கார்ந்திருந்தாராம்.. அந்த நேரத்தில்தான் ஒரு அர்ச்சகர் அங்கே வந்துள்ளார்.. அகஸ்தியர் கோயில் அர்ச்சகர் அவர்.. ஜெயலலிதா, சசிகலா வீட்டில் எந்த விஷேசம் என்றாலும் இவர்தான் முன்னின்று எல்லாவற்றையும் செய்வாராம்..

 கன்றுக்குட்டி

கன்றுக்குட்டி

அன்றைய தினமும் அர்ச்சகர் வேதாந்தி அங்கு வந்திருந்தார்.. பசுவையும், கன்றையும் சசிகலாவின் முகம் பார்க்க வைத்தார்... அதற்கு பிறகுதான் சசிகலா காரை விட்டு கீழே இறங்கினாராம்.. பூசணிக்காய், எலுமிச்சை வைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.. 5 சுமங்கலி பெண்கள் வந்து சசிகலாவின் கை ய பிடித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்களாம்.. ஆரத்தியும் எடுக்கப்பட்டுள்ளது.. இறுதியில் வீட்டுக்குள் காலை வைத்த சசிகலா, சுடச்சுட பாலை குடித்தாராம்.

தினகரன்

தினகரன்

அதாவது விசேஷ பூஜைகள் உட்பட பல சாங்கியங்கள் அன்றைய தினம் நடந்து கொண்டே இருந்துள்ளது.. சசிகலா உள்ளே நுழைந்ததும் கதவு அடைக்கப்பட்டது.. அதற்கு பிறகு வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் மேலும் சில சடங்குகள் நடந்துள்ளது.. இதெல்லாம் டிடிவி தினகரனுக்குகூட தெரியாதாம்.. இவ்வளவு பூஜை, புனஸ்காரங்களுக்கு காரணம், மறுபடியும் அந்த "சாட்டை" தன் கையில் வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

English summary
Sasikala in Chennai T Nagar house and Special Poojas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X