• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இப்பதான் வர்றீங்களா, ரொம்ப லேட்.. எப்பவோ எதிர்பார்த்தேன்".. சிரித்து சொன்ன ஸ்டாலின்.. சீறிய சசிகலா!

Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரன் ஒதுங்கியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.. இதனால், கட்சிக்குள் அதிருப்திகள் கூடி வருகின்றன.. திமுகவுக்கோ பலத்தை பெருக்கி கொண்டு வருகிறது.. இதனால், அதிமுகவோ, விழித்து கொண்டிருக்கிறது.. அமமுகவோ தடுமாறி கொண்டிருக்கிறது..!

திமுக ஆட்சிக்கு வந்ததுமே, அதிக அளவு பிஸியானவர் செந்தில் பாலாஜிதான்.. இவருக்கு என்ன மாதிரியான அசைன்மென்ட் திமுக தலைமையில் தரப்பட்டது என்பது இப்போது வரை வெளிப்படையாக தெரியவில்லை.

கொங்கு மண்டலம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருவது இவரால்தான் என்பது நிரூபணமாகி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, அதிமுகவையும் தாண்டி அமமுகவுக்குள்ளும் செந்தில்பாலாஜியின் செல்வாக்கு விரிவடைந்து செல்வதையும் காண முடிகிறது.

 பழனியப்பன்

பழனியப்பன்

அதற்கு முக்கிய உதாரணம்தான் அமமுகவின் பழனியப்பன்.. செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம் வந்தபிறகு, அமமுகவை தாங்கி கொண்டிருந்ததே பழனியப்பன்தான்.. அதிலும் வெற்றிவேல் மறைவுக்கு பிறகு, இவரைதான் அதிகம் நம்பினார் டிடிவி தினகரன்.. ஆனால், திமுக ஆட்சிக்கு பொறுப்பு வந்ததுமே, பழைய பழக்கத்தில் நேராக பழனியப்பன் வீட்டுக்கு சென்றுவிட்டார் செந்தில்பாலாஜி.

 சந்தர்ப்பம்

சந்தர்ப்பம்

செந்தில்பாலாஜியை பார்த்ததுமே மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனை புகைச்சலையும் பழனியப்பன் கொட்டிவிட, இதுதான் சந்தர்ப்பம் என்று அவரை சமாதானப்படுத்தியே, கையை பிடித்து ஒருவழியாக அறிவாலயம் பக்கம் அழைத்து வந்துவிட்டார் செந்தில்பாலாஜி.

 பழனியப்பன்

பழனியப்பன்

வேறு யாராவது இருந்தால், துரைமுருகன் அல்லது மூத்த தலைவர்கள் தலைமையில் கட்சிக்குள் இணைந்து விடுவார்கள்.. ஆனால், பழனியப்பன் பெரிய புள்ளி.. அதுவும் கொங்கு மண்டல தூண்.. எனவே, ஸ்டாலினின் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி, அவர் முன்னிலையில் ஐக்கியமானார் பழனியப்பன்.. பழனியப்பனிடம், "உங்களை எப்பவோ எதிர்பார்த்தேன்.. நீங்க லேட்டு" என்று சிரித்தபடியே சொல்லி வரவேற்றாராம் ஸ்டாலின்

 ஹைலைட்

ஹைலைட்

இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், இவ்வளவு விஷயமும் தினகரன் காதுக்கு சென்றுள்ளது.. ஆனாலும் அவர் அதை கண்டுகொள்ளவில்லையாம்... ஆனால், இதற்கெல்லாம் சேர்த்துதான் செம டோஸ் விழுந்துள்ளதாம்.. அமமுகவில் இருப்பதே முக்கிய மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்தான். இதனால் டென்ஷன் ஆகிவிட்டாராம் சசிகலா..

 கண்டிப்பு

கண்டிப்பு

உடனடியாக தினகரனுக்கு போனை போட்டு, "கட்சி விசுவாசிகளை பாதுகாக்க உனக்கு தெரியவில்லை.. திமுக பக்கம் எல்லோரும் போவதற்குத்தான் நீ கட்சி நடத்துகிறாயா?" என்று கடிந்து கொண்டிருக்கிறாராம்.. அதற்கும் வழக்கம்போல் அமைதி காத்தாராம் கூல் தலைவர்.

English summary
Sasikala is angry over AMMK TTV Dinakarans Politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X