• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்?

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி விட்டு திரும்பியுள்ளனர்.

ஆனால் வழக்கமான உற்சாகம், எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் இந்த முறை மிஸ்சிங்.

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்

ஜூலை 25 ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி-யாக இருப்பதால் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு பால் காய்ப்பு நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்க அவர் சென்றதாகவும் அப்போது கூறப்பட்டது.

திடீர் பயணம்

திடீர் பயணம்

ஆனால் திடீரென டெல்லியில் இருந்து ஒரு அழைப்பு.. உடனடியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களாக இருந்த சிலரும் இரவே டெல்லிக்கு கிளம்பினர் . இதைத்தொடர்ந்து 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் காத்திருந்து சந்திப்பு

ஒரு நாள் காத்திருந்து சந்திப்பு

அன்றைய தினமே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து மறுநாள், அதாவது நேற்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், அமித் ஷாவை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பு ஆகியவற்றுக்கு பிறகு செய்தியாளர்களை எடப்பாடிபழனிசாமி சந்தித்த போதெல்லாம் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு கோரிக்கை வைப்பதற்காக வந்தோம் என்று மட்டும் தெரிவித்து கிளம்பிவிட்டார்.

டல்லாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி

டல்லாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா குறித்து கேள்வி எழுப்பும் போது வழக்கமாக ஆவேசம் காட்டும் எடப்பாடிபழனிசாமி ,இந்தமுறை பதிலளிக்காமல் நன்றி வணக்கம் என்று கூறி கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் வழக்கமாக எடப்பாடிபழனிசாமி முகத்தில் காணப்படும் உற்சாகம் இந்த முறை டெல்லி விசிட்டிங்கின்போது மிஸ்ஸிங். எப்போதுமே மிகவும் கூலாக சிரித்த முகத்தோடு பேட்டி அளிக்கும் எடப்பாடி பழனிசாமி, டல்லாக இருந்ததை கவனிக்க முடிந்தது என்று தெரிவிக்கிறார்கள் டெல்லி பத்திரிக்கையாளர்கள்.

சசிகலா, தினகரன்

சசிகலா, தினகரன்

"சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வதுதான் கட்சிக்கு நல்லது" என்று டெல்லியில் இருந்து உறுதியாக கூறப்பட்டது தான் இந்த அப்செட்டுக்கு காரணம் என்கிறார்கள். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்துள்ளார் . தென்மாவட்டங்களில் மற்றும் தேனி மாவட்டத்தில் அதிமுக வெற்றிக்கு இது உதவும் என்று அவர் கணித்துள்ளார். ஆனால் "இரட்டை இலைக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.. தனிநபர்களுக்கு ஓட்டு வராது" என்று உறுதிபட தெரிவித்து , வேண்டாம் என்று சொன்னது எடப்பாடி பழனிசாமிதான். ஆனால் இப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர் .மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரெய்டுகள்

தமிழகத்தில் ரெய்டுகள்

அதிமுக பிளவுபட்டு இருப்பதால்தான் தமிழக அரசு தைரியமாக நடவடிக்கை எடுக்கிறது.. என்று பல நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் . இதையும் குறிப்பிட்ட "டெல்லி" வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கட்சி வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.. அப்போதுதான் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.. எனவே சசிகலாவை சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை என்ற வகையில் பேசியிருக்கிறது. முழுக்க முழுக்க லோக்சபா தேர்தல் கால்குலேஷன்கள்தான் டெல்லியிடமிருந்து வெளிப்பட்டுள்ளன. இதனால்தான் எடப்பாடி பழனிசாமி அப்செட் என்று கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அப்செட்

எடப்பாடி பழனிச்சாமி அப்செட்

இருப்பினும், அதிமுகவில் இருந்த சில எம்எல்ஏக்களை சசிகலா தரப்பு இழுத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த நினைப்பதற்கு பணபலம் தான் காரணம் என்று குற்றப் பட்டியலை வாசித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. வருமான வரித்துறை சசிகலாவின் பல சொத்துக்களை முடக்கம் செய்து வைத்திருக்கிறது .இதை விடுவிப்பதற்கு சமீபத்தில் தேர்தலுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி லாபி செய்து வருகிறார்.. இந்த லாபி உடைக்கப்பட்டால் சசிகலா துணிச்சலாக இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற ஒரு தகவலை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் டெல்லி பச்சைக்கொடி காட்டவில்லை என்பதால் சசிகலா மீண்டும் என்ட்ரி ஆவது ஏறத்தாழ உறுதியாகிறது. இதில் பன்னீர்செல்வத்துக்கு விருப்பம் இருப்பதால் யோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக அவர் அடுத்தடுத்த நாட்களில் ஆலோசனை நடத்துவார் என்று கூறுகிறது அதிமுக வட்டாரம்.

English summary
Edappadi Palaniswami is very upset during Delhi visit, says sources as alliance partner BJP wants Sasikala to join AIADMK. The party needs to be strong before the forthcoming Lok Sabha elections says BJP to AIADMK. The entire Lok Sabha election calculations have emerged from Delhi. This is why Edappadi Palanisamy is said to be upset.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X