சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுக பிரச்சாரத்தில் 'சசிகலா' படம் மிஸ்ஸிங்.. காணும் இடமெல்லாம் டிடிவி தினகரன் படமே

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், அவரது படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் அந்த கட்சியினர் பயன்படுத்தாமல் உள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை சசிகலாவுக்கு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க முடியாமல் போனதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார்.

இதனால் முதல்வர் பதவி கிடைக்தா விரக்தியில் இருந்த ஓ பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என தர்ம யுத்தம் நடத்தினார். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக மாறினார். அதேநேரம் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓரம் கட்டியதோடு, அதிமுகவில் இருந்தும் நீக்கினார்.

நடிகர் ஜே. கே. ரித்தீஷுக்கு மீண்டும் தீவிர சிகிச்சை நடிகர் ஜே. கே. ரித்தீஷுக்கு மீண்டும் தீவிர சிகிச்சை

டிடிவி

டிடிவி

இதனால் 18எம்எல்ஏக்களுடன் வெளியேறிய, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார் டிடிவி தினகரன், அதன் பொதுச்செயலாளர் சசிகலா என்றும் அறிவித்தார். மேலும் தான் கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்றும் அறிவித்தார்.

தினகரன் சந்திப்பு

தினகரன் சந்திப்பு

இந்நிலையில் அடிக்கடி பெங்களூரு சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி விவகாரங்கள், தேர்தல் விவகாரங்கள் உள்பட பல விஷயங்களில் சசிகலாவின் ஆலோசனை படி டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார்.

டிடிவி வெற்றி

டிடிவி வெற்றி

அமமுக கட்சி ஆரம்பித்தது முதலே சசிகலாவின் படத்தை டிடிவி தினகரன் பெரிதாக பயன்படுத்தவில்லை. முன்னதாக கட்சி ஆரம்பிக்கும் முன்பே சுயேட்சையாக ஆர்கே நகரில் தினகரன் போட்டியிட்ட போதும், கூட சசிகலா படம் பயன்படுத்தப்படவில்லை. அங்கு அவர் அபார வெற்றி பெற்றார்.

தினகரன் படம்

தினகரன் படம்

இப்போது மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமமுகவினரின் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். ஆனால் பிரச்சாரத்தில் எங்குமே சசிகலாவின் படத்தை பார்க்க முடியவில்லை. டிடிவி தினகரனின் படங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

தினகரன் முன்னிலை

தினகரன் முன்னிலை

கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதலே டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சிறை வாழ்க்கைக்கு பின் சசிகலா வந்தாலும் தீவிர அரசியலில் ஈடுபடுவரா என்ற சந்தேகம் இருப்பதால், டிடிவி தினகரனை அமமுகவினர் முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கூட அண்மையில் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவைப்போல் தன்னையே அமமுகவினர் நம்புவதாகவும், அதனால் முன்னிலைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

English summary
ammk general secretary sasikala picture missing in AMMK election campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X