• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர் சந்திப்பு.. "திருந்திட்டோம்னு சொல்லு".. டக்குன்னு சேர்ந்து.. சசிகலாவுக்கு ஹேப்பி நியூஸ்..!

|

சென்னை: சசிகலா ரிலீஸ் ஆகிறார் இன்று.. ஆனால், அவரது வருகைக்கு முன்பே நல்ல விஷயம் ஒன்று அவரது குடும்பத்தில் நடந்துள்ளது..!

சசிகலாவை பொறுத்தவரை, அமமுக என்ற ஒரு கட்சி இருப்பதை பார்த்ததில்லை.. அவர் சிறைக்கு சென்றபிறகுதான் அத்தனை பிரச்சனைகளும் நடந்தன.

முக்கியமாக டிடிவி தினகரனிடம்தான் பொறுப்பை தந்துவிட்டு சென்றார்.. ஆனால் அவரது துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு தீவிரமாக கட்சிக்குள் இறங்கி அதிரடி காட்டினார்.. தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும் கூட்டிக் கொண்டார்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த சமயத்தில்தான், தினகரன், திவாகரன் இருவருக்குமிடையே ஈகோ பிரச்சனை தலைதூக்கியது.. அதனால், தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார்.. சசிகலாவை பிரதானப்படுத்தினார்.. அதன்மூலம் சசிகலா ஆதரவாளர்களை தன் பக்கம் கொண்டு வர முயன்றார். ஆனால் தினகரனுக்கு கிடைத்த கட்சியின் ஆதரவும் சரி, மக்களின் ஆதரவும் சரி, திவாகரனுக்கு கிடைக்கவில்லை...

 எடப்பாடியார்

எடப்பாடியார்

இருந்தாலும், எடப்பாடியாரின் அம்மா மறைவுக்கு தன்னுடைய மகன் ஜெய் ஆனந்தை அனுப்பி ஆறுதல் கூற செய்ததும், டிடிவி தரப்புக்கு சற்று ஷாக்கை தந்தது.. ஒருவேளை சசிகலாவுக்கு எதிராக எதையாவது செய்ய போகிறாரோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தினார்... அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து, பகீர் குற்றச் சாட்டுகளையும் தினகரன் மீதே முன்வைத்து வந்தார்.

 சறுக்கல்கள்

சறுக்கல்கள்

இதைதவிர, சிறையில் சசிகலாவை சந்திக்கும்போதெல்லாம் குடும்ப பிரச்சனைகள் பேசப்பட்டன.. அது சசிகலாவுக்கு மேலும் கொதிப்பை தந்தது.. அமமுகவின் சறுக்கலும் சசிகலாவுக்கு அப்செட்டை தந்தது.. இப்போதுகூட சசிகலாவுக்கு முதல்நாள் உடம்பு சரியில்லை என்றதும், "பயப்படும்படி ஒன்றும் இல்லை" என்று டிடிவி சொன்னார்.. ஆனால், "உடல்நிலை குறித்து மர்மமாக இருக்கிறது" என்று திவாகரன் சொன்னார்.. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் முரண்டு பிடித்தது கொண்டே இருந்தநிலையில், சசிகலாவின் ரிலீஸ் உறுதியானது..

சமாதானம்

சமாதானம்

இனியும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அது சரிபட்டு வராது என்று நினைத்தார்களோ என்னவோ, 2 பேரும் ராசியாகிவிட்டார்கள்.. திவாகரனின் மருமகள் அதாவது ஜெய் ஆனந்தின் மனைவி சுபஸ்ரீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மனைவி அனுராதாவுடன் கலந்து கொண்டார்... இத்தனைக்கம் இந்த கல்யாணத்துக்கு தினகரனை கூப்பிடக்கூட இல்லை.. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் திவாகரனும், தினகரனும் சந்தித்து கொண்டதுடன், அங்கே ஒரு ரூமில் தனியாக ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

ஹேப்பி

ஹேப்பி

முதல்வேலையாக, சசிகலாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கையை கையில் எடுத்து, ஒரு தனி டீமை போயஸ் கார்டனில் இருந்து வரவழைத்தது.. இன்று சசிலாவை வரவேற்கவும் இருவரும் தயாராகி விட்டனர்.. அமமுகவில் அதாவது சசிகலா சம்பந்தப்பட்ட அனைவருமே ஒற்றுமையாக இருந்தால்தான், அதிமுகவை சரி செய்ய முடியும் அல்லது அமமுக தனித்து களம் காண முடியும் என்பதுதான் இதன் சூட்சுமம். சசிகலா ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்களோ, அது போலவே, மன்னார்குடி குடும்பமே இப்போது ஒரே பூரிப்பும், சந்தோஷமும், மகிழ்ச்சியுமாக கைகோர்த்துள்ளது..!

English summary
Sasikala release and happy incident happened in Mannarkudi family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X