சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பிச்சாச்சு... சின்னம்மா வெளியே வந்தாச்சு.. சந்திக்க டைம் கேட்டு லைனில் நிற்கும் "பெருந்தலைகள்"!

சசிகலாவை சந்திக்க சிலர் முயன்று வருகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: அணி மாறும் வேலை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.. காரணம், ஒருசில தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.. இது எடப்பாடியாருக்கு கலக்கத்தை தந்து வருவதாக தெரிகிறது!

சசிகலா இன்னும் சென்னைக்கு வராத நிலையில், அவரை பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பையும் தமிழக அரசியலில் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

அதிமுகவில் உள்ள ஒருசிலர் சசிகலாவுக்கு நேரடியாகவே ஆதரவை அளித்தனர்.. ஆனால் தொடர்ந்து சசிகலாவை பாராட்டுவதற்கு அதிமுக தலைமை கடிவாளம் போட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு ஒரு "பந்து" கூட வேஸ்ட் ஆக்காமல்.. அடுத்தடுத்து அதிரடி.. திக்குமுக்காட வைக்கும் எடப்பாடியார்..!

 கடிவாளம்

கடிவாளம்

எனினும், ஒருசில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.. ஆனால் அவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. ஏற்கனவே சிறையில் உள்ள சசிகலாவ சந்திக்க 2 அமைச்சர்கள் மனு தந்திருந்தனர்.. அவர்களும் யார் என்று தெரியாத நிலையில், மேலும் சிலர் சசிகலாவை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

நேற்றுகூட சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நபர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.. இப்படி மேலும் சிலர் கிளம்பினால், அடுத்தடுத்து அதிமுகவில் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுந்து வருகிறது...

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

ஒருவேளை, கசிந்து வரும் இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், தடாலடியாக கிளம்பி சென்று சசிகலாவை சந்திக்க நேர்ந்தால், கட்சி தலைமை இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று பகிரங்கமாக அறியப்பட்டவர்கள், தற்போது தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்தாலும், இன்னும் எவ்வளவு நாளைக்கு தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

 இசட் பிரிவு பாதுகாப்பு

இசட் பிரிவு பாதுகாப்பு

இதற்கிடையே, சசிகலா வரும் நாட்களில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத விஐபியாக போகிறார் என்பதற்கான இன்னொரு அறிகுறியும் தென்படுகிறது. அதாவது அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துரைச் செயலாளரிடம், சசிகலாவின் வழக்கறிஞர் மனு போட்டுள்ளார். இது கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மத்திய அரசு நினைத்தால் கொடுக்க உத்தரவிட முடியும் என்பதால் இந்த விவிஐபி பாதுகாப்புடன் சசிகலா வலம் வரப் போகிறாரா என்ற பயங்கர எLிர்பார்ப்பும் நிலவுகிறது.

English summary
Sasikala release and petition seeking Z plus protection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X