சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா கண் பார்வையில் சிக்கிய "மெகா புள்ளி".. விரைவில் தாவுகிறாராமே.. டெல்டா பாசமா?

சசிகலா பக்கம் தாவுகிறாரா வைத்திலிங்கம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் மெகா புள்ளியை சசிகலா தட்டி தூக்கிவிடுவார் என்கிறார்கள்.. அதற்கான அச்சாரங்கள் வலுவாக போடப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து வருகின்றன.

சென்னை வரும்போது நடந்த ரோடு ஷோவை பார்த்து ஆச்சரியப்பட்ட சசிகலாவுக்கு அந்த சந்தோஷம் ஒரே ஒருநாளுடன் முடிந்துவிட்டது.. அதற்கு பிறகு தி.நகர் வீட்டு பக்கம் அதிமுக நிர்வாகிகள் யாரையும் காணோம்.

அதேசமயம், சசிகலா வெகு ஜாக்கிரதையான காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.. அந்த வகையில் அதிமுகவின் மிக முக்கிய நபர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையிலும் இறங்கியதாக செய்திகள் வந்தன.. அந்த வகையில் 2, 3 நபர்கள் பெயர் அடிபட்டது போலவே, இப்போதும் ஒருபெயர் அடிபட்டுள்ளது.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

அவர்தான் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் ஆவார்.. இவர் சசிகலாவின் ஆதரவாளர்... சசிகலாவால்தான் அரசியலில் வளர்க்கப்பட்டவரும்கூட.. எனினும், சசிகலா ஜெயிலில் இருந்தபோதுகூட, வெகு சாமர்த்தியமாக தன்னை அதிமுக தலைமையிடம் நெருக்கமாக வைத்து கொண்டார். எனினும், சமீப காலங்களில் டெல்டா அரசியலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் ஒரு வருத்தம் இவருக்கு இருக்கத்தான் செய்கிறது.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

சசிகலா ரிலீசுக்கு பிறகு இவரது நிலைப்பாடு சற்று தள்ளாட்டத்தில் உள்ளதாகவே சொல்லப்பட்டு வந்தது.. ஏனென்றால், சசிகலா மீது சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றோர் டிஜிபியிடம் புகார் கொடுக்க சென்றபோது, வைத்திலிங்கமும் செல்ல வேண்டியதாம்.. ஆனால் கடைசி நேரத்தில் போகவில்லை.. அதேபோல, மற்ற அமைச்சர்கள் காட்டமான கருத்தை சசிகலாவுக்கு எதிராக முன்வைத்தும், வைத்திலிங்கம் வாய் திறக்காமல் மவுனம் காத்தார். அப்போதே ஒரு டவுட் கட்சிக்குள் எழ ஆரம்பித்துவிட்டது.

 சமுதாய பாசமா?

சமுதாய பாசமா?

கட்சியின் மிக முக்கியமான நிர்வாகி, ஏன் அமைதி காக்கிறார்? ஒருவேளை டெல்டா பாசமா? சமுதாய பாசமா? என்ற குழப்பமும் ஏற்பட்டது... இதற்கு காரணம், மத்திய அமைச்சர் பதவி மீது ஒரு ஆசை இருந்துகொண்டே இருந்தது.. கிட்டத்தட்ட இவர்தான் மத்திய அமைச்சர் என்ற செய்திகளும் வெளியாக ஆரம்பித்தன.. ஆனால, கடைசி நேரத்தில் ஓபிஆர் அந்த பதவியை தட்டி சென்றுவிட்டார்.. அதனால் மேலும் வருத்தம் இவருக்குள் கூடியது. அதனால்தான், சசிகலாவுக்கு வைத்திலிங்கம் ஆதரவு தருவாரோ என்ற சந்தேகம் இன்னமும் உள்ளது.

 வாழ்வா, சாவா

வாழ்வா, சாவா

இப்படிப்பட்ட சூழலில்தான், "அதிமுகவிற்கு இந்த தேர்தல், வாழ்வா, சாவா போராட்டம்... நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மறுபடியும் அதிமுக ஆட்சிதான்' என்று நேற்றைய அதிமுக கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியுள்ளார்.. இவர் ஏன் அப்படி பேசினார்? எந்த இணைப்பு பற்றி சொல்கிறார்? என்ற குழப்பம் உள்ளது.. ஆனால், அதிமுக, அமமுக கட்சிகளையே மனசில் வைத்து வைத்திலிங்கம் அடித்து சொல்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

ஒரத்தநாடு

ஒரத்தநாடு

அதுமட்டுமல்ல, இந்த முறை ஒரத்தநாடு தொகுதியில், சீட் கேட்டு வருகிறார்.. ஒரத்தநாட்டில் அமமுகவுக்குதான் வாக்கு வங்கி அதிகமாக உள்ளது.. ஒருவேளை கட்சிகள் இணைந்துவிட்டால் வைத்திலிங்கத்தக்கு ஒரத்துநாடு நிச்சயம் தரப்படும.. இல்லாவிட்டால், அமமுக சார்பில் மாவட்ட செயலர் சேகர் போட்டியிடவே வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்..

 முதல் குரல்

முதல் குரல்

இதில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதனால்தான் சசிகலா தரப்பை அனுசரித்து போக வைத்திலிங்கம் தயாராகிவிட்டாரா? அல்லது இந்த செய்திகள் எல்லம் வெறும் யூகம்தானா என்று தெரியவில்லை... பார்ப்போம்.. இணைப்பு பற்றி இப்போதைக்கு டிடிவி தினகரன் தவிர வேறு யாருமே பேச்சு எடுக்காத நிலையில், அதிமுக தரப்பில் இருந்து முதல் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது..

English summary
Sasikala release and Whats Vaithilingams Stand actually
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X