சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடும் விரக்தி.. ஜன்னல் சீட்டில் துண்டு போட்ட பிரேமலதா.. இரவில் வந்த சசியின் திக் அறிவிப்பு.. போச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் அரசியல் விலகல் அறிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டது இருப்பது அமமுகவை விட தேமுதிகதான்.. மொத்த தேமுதிக கேம்பும் நேற்று சசிகலா கொடுத்த அறிக்கையால் ஆடிப்போய் இருக்கிறது. பிரேமலதா சொன்ன சில விஷயங்கள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். சில கார்கள் மாறி, 23 மணி நேரம் பயணம் செய்து, ஆரவாரங்களுடன் அவர் தமிழகம் வந்து சேர்ந்தார்.

சசிகலாவின் இந்த வருகையை அதிகம் எதிர்பார்த்தது அமமுகவை விட தேமுதிக என்றுதான் கூற வேண்டும். பல்வேறு கணக்குகளை போட்டு தேமுதிக துணிச்சலாக சில திட்டங்களை வகுத்து இருந்தது.

"அழுத்தம்" எங்கிருந்து வந்தது.. சசிகலா சைலன்ட் மோடுக்கு போனது ஏன்.. பரபரக்கும் தகவல்கள்!

திட்டம்

திட்டம்

சசிகலா வந்த பின் தமிழக அரசியல் மாறும் என்று தேமுதிகவும் அதன் பொருளாளர் பிரேமலதாவும் தீவிரமாக நம்பினார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போதே முதல் ஆளாக பிரேமலதா சசிகலாவை பாராட்டி பேசி இருந்தார். சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும். அவருக்கு ஒரு பெண்ணாக நான் என் ஆதரவை கொடுக்கிறேன்.

ஆதரவு

ஆதரவு

சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும். சசிகலாவால் ஆதாயம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிமுகவில் சசிகலாவால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை ஓரம்கட்ட கூடாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா முதல் ஆளாக குறிப்பிட்டு இருந்தார். சசிகலாதான் இனி பவர் சென்டர் என்று நம்பி பிரேமலதா இப்படி துணிச்சலாக பேசி வந்தார்.

கூட்டணி

கூட்டணி

எப்படியாவது அதிமுகவில் சசிகலா மீண்டும் ஆதிக்கம் பெறுவார். அதனால் இப்போதே அவருக்கு துண்டு போட்டு வைத்துக்கொள்ளலாம், எதிர்காலத்தில் கூட்டணி விஷயங்களில் வசதியாக இருக்கும் என்று தேமுதிக தீவிரமாக நம்பியது. இதனால் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கூட தேமுதிக கண்டிப்புடன் கறாராகவே இருந்தது. ஆனால் தேமுதிக நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக ஆகிவிட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்ததை தேமுதிக கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நேற்று இரவு வந்த திடீர் அறிவிப்பால் தேமுதிக கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளது. சசிகலாவை நம்பி தேமுதிக போட்ட கணக்கு எல்லாம் வீணாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தேமுதிக, திமுக உட்பட யாரும் எதிர்பார்த்த அளவிற்கு சசிகலா எதுவும் செய்யவில்லை. டெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி மீண்டும் ரெஸ்ட் எடுக்கும் முடிவை சசிகலா எடுத்துவிட்டார்.

கூல் டவுன்

கூல் டவுன்

இதனால் மீண்டும் அதிமுகவை கூல் டவுன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தேமுதிக சென்றுள்ளது. அதிமுகவை தேமுதிக சமாதானம் செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் நீடிக்க தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக கலந்து கொள்ள வேண்டும். தேமுதிகவிற்கு தற்போது இருக்கும் ஒரே வழி இதுதான்.

சசிகலா

சசிகலா

சசிகலாவை நம்பி அவசரப்பட்டு பிரேமலதா பேசியது தற்போது அந்த கட்சிக்கே கொஞ்சம் எதிராக மாறியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதால் மீண்டும் அதிமுக தரப்போடு தேமுதிக சுமுகமாக செல்ல வேண்டும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிடும் என்பதால் தேமுதிக தற்போது பேச்சுவார்த்தைகளில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது.

English summary
Sasikala's decision to leave the politics hurts DMDK more than AMMK: Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X