சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர், கொடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.
கிடைத்த அடிப்படையில் வருமான வரித்துறை சசிகலா இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா வருகைக்கு முன் ஒன்றுபட்ட ஒபிஎஸ்-இபிஎஸ்... டெல்லிக்கு.. டிடிவிக்கு சொன்ன மெசேஜ்.. பரபர பின்னணி

300 கோடி சொத்து முடக்கம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் போயஸ் கார்டன் சொத்துக்கள் ஏற்கனவே வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடத்தை சசிகலாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் கடந்த மாதம் வருமான வரித்துறை முடக்கி இருந்தது இந்த சொத்துக்களின் ரூ.300 கோடி என்று கூறப்பட்டது.

முடக்கிய வருமான வரித்துறை
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வந்த உடன் ஜெயலலிதா இல்லம் போலவே ஒரு இல்லத்தை போயஸ் கார்டனில் கட்டப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், வருமான வரித்துறையினர் சொத்துக்களை முடக்கி அப்போது உத்தரவிட்டனர்.

2 கோடி சொத்துக்கள்
இந்நிலையில் 2017ல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் சிறுதாவூர், கொடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. ஒட்டமொத்தமாக சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி சொத்துக்களை வருமான வரித்துறை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளது.

அடுத்த ஆண்டு விடுதலை
சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சிறையில் இருந்து வருகிறார்கள்.