Just In
ஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா? பிரேமலதா சீற்றம்
சென்னை: சசிகலாவால் ஆதாயம் அடைந்த அதிமுகவினரே அவரை வேண்டாம் என சொல்வது சரியல்ல என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரேமலதா கூறியதாவது:
சசிகலா விடுதலையை வரவேற்கிறேன், தமிழக அரசியலில் பங்கெடுக்க வேண்டுமென ஒரு பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் திமுக, அதிமுகவிற்கே இது முதல் தேர்தல். விஜயகாந்த் அனுமதி கொடுத்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன்.
ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா. சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகம். தற்போது அவரை வேண்டாம் என சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது.
அவரது விடுதலையை வரவேற்கிறேன். விடுதலையாகி அரசியலில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.