சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ்ஸிடமும் சசிகலா பேசினாரா.. கிளம்பி வரும் புதுத் தகவல்.. வெளியாகுமா ஆடியோ?

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுடன் நிர்வாகிகள் பேசி வரும் நிலையில் முன்னாள் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வமும் அவருடன் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    OPS மட்டும் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால்.. Sasikala வேதனை | Oneindia Tamil

    சசிகலா சிறையிலிருந்த வரை அவர் சிறையிலிருந்து வெளியே சென்ற வீடியோ, அவரது சிறை அறையில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் வைரலாகி வந்தன. இந்த சம்பவங்களுக்கு பின்னர் சசிகலாவின் பெயர் அவர் ரிலீஸ் ஆவதற்கு முன்னர்தான் அடிப்பட்டது.

    எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்ததாக அமமுகவினர் கூறி வரும் நிலையில் சசிகலா வெளியே வந்தவுடன் நிச்சயம் கட்சியை கைப்பற்றி எடப்பாடிக்கு ஒரு பாடம் கற்பிப்பார் என சொல்லப்பட்டது.

    சீனாவிடம் சிக்கிய இலங்கை.. ஆபத்தை உணராத இந்தியா... மத்திய அரசு மீது திமுகவின் முரசொலி பாய்ச்சல் சீனாவிடம் சிக்கிய இலங்கை.. ஆபத்தை உணராத இந்தியா... மத்திய அரசு மீது திமுகவின் முரசொலி பாய்ச்சல்

    வாக்குகள்

    வாக்குகள்

    ஆனால் சட்டசபை தேர்தலில் அவர் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து அண்மைக்காலமாக சசிகலா ஆடியோ அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதலில் வெளியான ஆடியோவில் தொண்டரிடம் சசிகலா பேசுகையில் கவலைப்படாமல் இருங்கள். விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன் என தெரிவித்திருந்தார். இது அவருடைய குரல்தானா என சந்தேகம் எழுந்தது. ஆனால் அது அவருடைய குரல்தான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

    அதிமுக நிர்வாகிகள்

    அதிமுக நிர்வாகிகள்

    இந்த நிலையில் சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகளை நேற்றைய தினம் அதிமுக தலைமை நீங்கியது. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை நீக்கியவர்கள் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்.

    உண்மையா

    உண்மையா

    இந்த நிலையில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இதற்கும் சாத்தியம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. காரணம் என்னவெனில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விஷயத்திலேயே மேற்கு மண்டலத்தினர் ஒன்று கூடி விட்டனரே என்ற ஆதங்கம் ஓபிஎஸ்ஸுக்கு இருந்தது.

    மேற்கு மண்டலம்

    மேற்கு மண்டலம்

    இந்த நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்திருந்தாலும் கொறடா உள்பட மெஜாரிட்டி பதவி மேற்கு மண்டலத்தினருக்கே சென்றுவிட்டது என்ற கோபம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

    ஆடியோ

    ஆடியோ

    இந்த நிலையில் ஓபிஎஸ் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியே அது வெளியானால் அதிமுகவில் புயலைக் கிளப்பும் என தெரிகிறது. சரி சசிகலாவிடம் ஓபிஎஸ் அப்படி என்னதான் பேசியிருப்பார்? நிச்சயம் தென் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியால் புறக்கணிக்கப்படுவது குறித்து பேசியிருக்கலாம்.

    ஓரங்கட்ட

    ஓரங்கட்ட

    இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்ற வழக்கை மீண்டும் கையிலெடுத்து பொதுச் செயலாளர் என்ற முறையில் அதை சசிகலா பெற்றுவிட்டால் இன்று தன்னை ஓரங்கட்டப்பார்ப்போருக்கு பாடம் புகட்டுவது குறித்தும் ஓபிஎஸ் பேசியிருக்கலாம். முக்கியமாக சசிகலாவுடன் இணைந்து தினகரனுடன் பேசி அமமுகவை ஒன்றிணைத்து , 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவது குறித்தும் பேசியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. மொத்தத்தில் அதிமுகவை சசிகலாவுடன் இணைந்து ஓபிஎஸ் ஏதேனும் திட்டமிட்டிருந்திருப்பார் என்றே தெரிகிறது.

    பரபரப்பு

    பரபரப்பு

    ஒரு வேளை இந்த ஆடியோ வெளியானால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. காரணம் சசிகலாவுடன் பேசியதாக 15 பேரை நீக்கியவர்கள் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மட்டுமே. எனவே ஓபிஎஸ்ஸே சசிகலாவுடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ உண்மையிலேயே இருந்து வெளியானால் நிச்சயம் அதிமுகவில் பரபரப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    What happened when so called audio of Sasikala and OPS conversation releases?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X