India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருவாடு மீனாகுதா? சி.வி.எஸ் ஏரியாவில் இறங்கும் சசிகலா.. உச்சகட்ட பரபரப்பில் தகிக்கும் திண்டிவனம்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக உட்கட்சிப் பூசலுக்கு இடையே சசிகலா இன்று பிற்பகல் திண்டிவனம் தொடங்கி மூன்று நாட்கள் வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான சி.வி.சண்முகம், சசிகலாவை மிகக்கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அவரது கோட்டைக்கு சசிகலா சுற்றுப்பயணம் செல்லவிருப்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் கூட சசிகலா - சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், சசிகலா வருகையையொட்டி அப்பகுதி அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

சசிகலா டூர்

சசிகலா டூர்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தீவிரமைடந்துள்ள நிலையில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் மன்னார்சாமி கோயிலுக்கு அருகிலிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார் சசிகலா. அங்கிருந்து பெருமுக்கல்-நல்லாளம் கூட்டுரோடு, பிரம்மதேசம், ஆலங்குப்பம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.

மீண்டும் பயணம்

மீண்டும் பயணம்

இதையடுத்து, 7ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வானூர் வட்டாச்சியர் அலுவலகம், ரங்கநாதபுரம், சேமங்கலம், கீழ் கூத்துப்பாக்கம் மற்றும் கிளியனூர் கடைவீதி ஆகிய பகுதிகளில் தொண்டர்களை நேரில் சந்திக்கிறார். பின்னர், 8ஆம் தேதி மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை நகராட்சியிலிருந்து புறப்பட்டு திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட களமருதூர், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கிறார் சசிகலா.

கருவாடு கூட மீனாகலாம்

கருவாடு கூட மீனாகலாம்

சசிகலா விடுதலையாகி பெங்களூர் சிறையில் இருந்து தமிழகம் வரும்போது, அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்முதலில் சொன்னவர் அதிமுகவின் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடமும் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். மேலும், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது என்ற சி.வி.சண்முகத்தின் பேச்சு பிரபலமானது.

 சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் தற்போது எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக மாறியிருக்கிறார். ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியிலேயே இல்லை என சி.வி.சண்முகம் சொன்னதுமே, அவரது ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் ஓபிஎஸ் படங்களையும், பெயரையும் பெயிண்ட்டால் அழித்து அதிரடி காட்டினர். அந்தளவுக்கு ஈபிஎஸ்ஸின் முன்னணி கள வீரராகப் பணியாற்றி வருகிறார் சி.வி.சண்முகம். எடப்பாடி பழனிசாமியுடன் தினமும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் சி.வி.சண்முகம்.

திண்டிவனத்தில்

திண்டிவனத்தில்

ஆனால், இன்று சி.வி.சண்முகத்தின் கோட்டையிலேயே சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணத்திற்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையூறு தரக்கூடும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சசிகலா திண்டிவனம் வந்த நிலையில், அவரை வரவேற்க அதிமுக கொடிகள் கட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடிக் கம்பங்களை அகற்றினர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள். இதனால் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்றும் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
Amid AIADMK internal conflict, Sasikala tour starting from Tindivanam this afternoon. AIADMK's former minister CV Shanmugam has been very critical of Sasikala, Sasikala's visit to tindivanam has raised expectations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X