சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கத்திப்பாரா கதறனும்! பாக்கம் திரும்பி பாக்கனும்! சின்னம்மா 2.0! சசிகலாவின் 2ஆம் கட்ட புரட்சி பயணம்!

Google Oneindia Tamil News

சென்னை : ஆன்மீக பயணத்திற்குப் பிறகு அரசியல் புரட்சி பயணத்தை தொடங்கியுள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இன்று இரண்டாம் கட்டமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து அதிமுக கொடியுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அதற்கு முன்னதாக தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை, மூத்த அமைச்சர்கள் துணையுடன் முதல்வர் பதவியில் அமர்த்தி விட்டு சென்றார்.

அதன் பின்னர் ஆட்சி மாறவில்லை என்றாலும் காட்சிகள் மாறின. சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அதன் பின்னர் கட்சியிலிருந்து அதிருப்தியில் வெளியேறி தனியாக செயல்பட்ட ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியினை நிறைவு செய்தார்.

என்னது சசிகலா வரப்போறாரா? ஒன்றரை வருஷமா இல்லாம இதென்ன புது ட்விஸ்ட்? அலெர்ட் ஆகுங்க.. பறந்த உத்தரவு!என்னது சசிகலா வரப்போறாரா? ஒன்றரை வருஷமா இல்லாம இதென்ன புது ட்விஸ்ட்? அலெர்ட் ஆகுங்க.. பறந்த உத்தரவு!

சசிகலா பயணம்

சசிகலா பயணம்

இதற்கிடையில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதோடு அவருடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கூறினார். பொதுச்செயலாளர் பதவியை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த நேரத்தில் சிறை பாசத்திற்கு பிறகு சசிகலா வெளிவந்த போதிலும் அவர் அவரால் முதல்வராகவோ தேர்தலிலோ போட்டியிட முடியாது. காரணம் சிறை சென்று வந்தபின் மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற விதி உள்ளது.

2ஆம் கட்ட புரட்சிப் பயணம்

2ஆம் கட்ட புரட்சிப் பயணம்

இதையடுத்து பொறுமையாக காய்களை நகர்த்தி வரும் சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அதன்படி முக்கிய கோவில்களில் தரிசனம் செய்த அவர் பிறகு புரட்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல் கட்டமாக சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறார். நண்பகல் 2 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்படும் அவர் கத்திப்பாரா வழியாக சென்று தாமரைப்பாக்கம்,பாக்கம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

சென்னை நிகழ்ச்சிகள்

சென்னை நிகழ்ச்சிகள்

இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியானது. அதில் கூட அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு இருந்த சசிகலா இன்றும் அதிமுக கொடி கட்டிய காரிலேயே பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இதற்காக வழிநடுகளும் அவரை வரவேற்க உற்சாகமாக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். வழிநெடுகிலும் அதிமுக கொடிகள், பேனர்கள் என ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் அவரை காண்பதற்காக ஏராளமானோர் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Recommended Video

    ADMK-வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு DMK-தான் காரணம் -சசிகலா குற்றச்சாட்டு
    என்ன திட்டம்?

    என்ன திட்டம்?

    தொடர்ந்து சுற்றுப்பயணத்தை முடித்து தியாகராய நகர் இல்லத்திற்கு திரும்பும் அவர் மீண்டும் ஐந்தாம் தேதி மூன்றாம் கட்ட புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். கடந்த முறை புரட்சிப் பயணம் மேற்கொண்ட போது அவ்வளவாக அரசியல் பேசாத சசிகலா இந்த முறையும் அவ்வாறே அரசியல் சார்ந்த கருத்துக்களை தவிர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்த புரட்சி பயணத்தின் போது அது குறித்த கருத்துகளை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சியை மீட்பது அதிமுகவில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் இந்த புரட்சி பயணத்தை சசிகலா மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Sasikala, who was expelled from the AIADMK after her spiritual journey, has embarked on a political revolution journey, and is scheduled to tour Chennai and Tiruvallur in the second phase today. Following this, his supporters are preparing to give him a grand welcome with the AIADMK flag.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X