சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திக்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?

விடுதலை ஆனதும் சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?

    சென்னை: ஓஹோ... இப்படி ஒரு பிளான் சசிகலாவுக்கு இருக்கிறது போலும்.. அதான் அதிமுக மட்டுமல்ல அமமுகவுக்கும் சேர்த்து அள்ளு கிளம்புகிறதாக தெரிகிறது.

    சில மாதங்களாகவே நன்னடத்தை காரணமாக சசிகலா வெளியே வருவார் என்று சொல்லப்பட்டு வந்தன. அதனால் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் இணைவாரா, அமமுகவை அதிமுகவுடன் இணைத்து விடுவாரா, பொதுச்செயலாளர் ஆகிவிடுவாரா என்ற பல்வேறு யூகங்களும் வெளிவந்தபடியே உள்ளன.

    ஆனால், அதிமுக தரப்பிலோ, சசிகலா வந்தால் சேர்த்து கொள்ள மாட்டோம், என்று கட்சி தலைமை அடிக்கடி தெரிவித்து வருகிறது. இதற்கு வழிமொழிவதை எந்தக் காலத்திலும் சசிகலாவும் தினகரனும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி கொண்டே இருக்கிறார்.

    முதுகுவலி

    முதுகுவலி

    இதுபோலவே டிடிவி தினகரனும் சொல்லி வருகிறார். துரோகிகளுடன்போய் சேருவோமா, உங்க அனுமானத்துக்கு ஒரு அளவு இல்லையா என்று மீடியாவையும் கேள்வி கேட்டிருந்தார். இப்போது சசிகலாவுக்கு ரொம்பவும் உடம்பு சரியில்லை... சுகர் அதிகமாகிவிட்டது.. கண்களில் நீர் வடிகிறது.. முதுகுவலி பிரச்சனை அதிகமாகிவிட்ட நிலையில், அவரை விடுதலை செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

    என் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து!என் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து!

    எதிர்கால அரசியல்

    எதிர்கால அரசியல்

    இதை கண்டு இவ்வளவு நாள் டென்ஷன், கோபம், வருத்தத்தில் இருந்த சசிகலா இப்போதுதான் உற்சாகமாகி உள்ளாராம். முதலில் யாரிடமும் பேசாமல் இருந்த சசிகலா, முக்கியமான சொந்தத்திடம் மட்டும், எதிர்கால அரசியல் பற்றி பேச ஆரம்பித்துள்ளராம். எடியூரப்பா அரசு சசிகலாவின் விடுதலைக்கு எல்லா காரியங்களையும் மறைமுகமாக செய்து வருகிறது. கர்நாடக அரசே ரிலீஸ் சம்பந்தமாக இறங்கிவிட்டதால், போலீஸ் அதிகாரி ரூபா தொடுத்த புகார் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சசிகலா நம்புவதாக கூறப்படுகிறது.

    செம ஐடியா

    செம ஐடியா

    அதனால் எப்படியும் ஜனவரி மாசம் ஜெயிலில் இருந்து வெளியே வருவது போன்ற பேச்சு எழுந்துள்ளது, அப்படி சசிகலா வெளியே வந்துவிட்டால், கண்டிப்பாக அதிமுகவில் சேர மாட்டாராம். அமமுகவிலும் சேர மாட்டாராம். இந்த இரு கட்சிகளுடன் இணையாமல், தனித்து இயங்குவதற்காக செம ஐடியாவை போட்டுள்ளாராம். இதுதான் அதிமுகவுக்கு மட்டுமல்ல, அமமுகவுக்கும் புளியை கரைக்கிறது. சசிகலா வெளியே வந்தால், அமமுகவில் தன் பலம் குறையும் என்றும், திவாகரனுக்கு முக்கியத்துவம் அதிகரித்துவிடும் என்பதுதான் டிடிவி தினகரனின் கவலையே!

    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி

    காரணம், எடப்பாடியார் அரசில் இன்னமும் பல அமைச்சர்கள் சசிகலாவின் ஆதரவாளர்களே. கொங்கு மண்டலத்தை தவிர எடப்பாடியாருக்கு அமைச்சர்கள் தரப்பு ஆதரவு இல்லை. அதனால், சசிகலா வெளியில் வந்தால், நிறைய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சசிகலா பக்கம் தாவ வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதைவிட உச்சக்கட்டமாக, "சின்னம்மா தியாகம் செய்துவிட்டுத்தான் ஜெயிலுக்கு சென்றுள்ளார். அவர் அதிமுகவுக்கு திரும்பி வந்து, கட்சியை வழிநடத்துவார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சொல்லி இருக்கிறார்... செல்லூர் ராஜு கேட்கவே வேண்டாம்.. அவர் எப்போதுமே சசிகலாவின் விசுவாசிதான்.

    பொதுச்செயலாளர்

    பொதுச்செயலாளர்

    இப்படித்தான் அமைச்சர்கள் தரப்பு இரண்டாக பிரிந்து, சலசலப்பை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளராக ஆகிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடியாரின் ஆசை. இரட்டை தலைமைக்கு ஒரு முடிவு கட்டி கட்சியை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறார். இப்போது சசிகலா வெளியே வந்துவிட்டால், தனக்கான ஆதரவு அமைச்சர்கள் குறைவு என்பதையும் உணர்ந்துள்ளார்.. அதனால் சசிகலாவின் விடுதலை அதிமுக, அமமுகவுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.

    English summary
    whats sasikalas new strategy after release, It is said that she will act alone without the aiadmk, dmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X