சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் மரணம் அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் - வைரமுத்து

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அ

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ்,பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இரு தினங்களுக்கு உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கொதிப்புடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த துயரச்சம்பவம் ஒவ்வொருவரின் இதயத்திலும் இறங்கிய இடி என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

சாத்தான்குளம் துயரம் 2 பேர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் போர்கொடி #JusticeForJeyarajAndFenixசாத்தான்குளம் துயரம் 2 பேர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் போர்கொடி #JusticeForJeyarajAndFenix

Sathankulam custodial death Vairamuthu post in Twitter

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில் சாத்தான் குளத்தில் குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடியல்லவா? அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்

Sathankulam custodial death Vairamuthu post in Twitter

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. நிவாரணமும், அரசு வேலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அரசு குற்றம் செய்த காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் அறிவித்தது.

உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முன்வைத்து பலரும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

English summary
Sathankulam custodial death Kavignar Vairamuthu condemns Tamilnadu police in his Twitter post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X