சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கஸ்டடி டெத்" கண்டிக்கத்தக்கது.. எச்.ராஜா ட்வீட்.. "4 நாளா எங்க போயிருந்தீங்க".. நெட்டிசன்கள் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: "சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு (custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.. அப்பாவும், மகனும் இறந்து 4 நாட்கள் ஆன நிலையில், தற்போது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், கஸ்டடியல் டெத் என்று எச்.ராஜா சொல்லி உள்ளதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கேட்டுள்ளதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த நான்கைந்து நாட்களாக தமிழ்நாடே கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் உள்ளது.. சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பாவும், மகனும் எப்படி இறந்தார்கள் என்றே இப்போது வரை பகிரங்கமாக தெரியவில்லை.

இந்த மர்ம மரணம் சம்பந்தமாக போலீசார் ஒருபக்கம் விசாரித்து வருகிறார்கள்.. கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டு வருகிறார்கள்.

சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்? சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்?

 போராட்டம்

போராட்டம்

வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்... இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மரணத்துக்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் நேரடியாகவே கேள்வி கேட்டுள்ளார். இப்படி 4 நாட்களுமே தமிழகம் அமைதியின்றி காணப்படுகிறது.

எச்.ராஜா

தற்போது பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான எச்.ராஜா இது சம்பந்தமாக ஒரு கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு (custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது... தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது... இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது... அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார்.

 முதல் குரல்

முதல் குரல்

அநேகமாக, இது சம்பந்தமாக பாஜகவின் முதல் எதிர்குரல் எச்.ராஜாவுடையதாகவே இருக்கக்கூடும் என தெரிகிறது.. அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், எச்.ராஜாவின் இந்த ட்வீட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அதேசமயம், 4 நாட்களாக எங்கே போயிருந்தீங்க? என்று எச்.ராஜாவை ட்விட்டர்வாசிகள் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

 கமெண்ட்கள்

கமெண்ட்கள்

"நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது,ஒன்றுமே வாய் திறக்காத நீங்கள் இன்றைக்கு இந்தியாவே ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கும் பின்பு உங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள்?
யாரும் நம்ப மாட்டார்கள்" என்றும், இந்திய அளவில் ட்ரெண்ட் பண்ணி எழுப்பிவிட்டுட்டாங்க போல. வேறு வழி இல்லாமல் இந்த பதிவை போடுகிறார்" என்றும் எச்.ராஜா ட்வீட்டுக்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்!

Recommended Video

    Sathankulam Incident : கிரிக்கெட் வீரர் Harbhajan Singh காட்டம் | Tweet In Tamil

    English summary
    sathankulam issue: bjp senior leader h raja condemns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X