சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவரு சொன்னாருன்னு இவரு சொன்னதாக அவங்க சொன்னாங்க- ரஜினி குறித்து திமுக எம்.பி செந்தில்குமார் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளசென்னை: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை- மகன் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதுவும் கருத்து தெரிவிக்காதது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

Recommended Video

    Sathankulam Incident : Rajinikanth ஏன் பேசாமல் இருக்கிறார்?

    சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதேநிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    சாத்தான்குளம் போலீசாரின் மிருகத்தனமான இந்த தாக்குதல் சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் என்றுதான் இல்லை.. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

    சாத்தான்குளம் மரணம்.. ஜெயராஜ் குடும்பத்துக்கு ரஜினி போன் செய்து இரங்கல் தெரிவித்தாரா?சாத்தான்குளம் மரணம்.. ஜெயராஜ் குடும்பத்துக்கு ரஜினி போன் செய்து இரங்கல் தெரிவித்தாரா?

    திரை பிரபலங்கள் கண்டனம்

    திரை பிரபலங்கள் கண்டனம்

    தமிழக திரைத்துறை பிரபலங்கள் பலரும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்திருக்கின்றனர். இதுவரை எந்த பிரச்சனைக்கும் வாய் திறக்காத பல நடிகர்களும் கூட மனம் பதைபதைத்து கண்டனத்தையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சர்ச்சையான ரஜினி மவுனம்

    சர்ச்சையான ரஜினி மவுனம்

    இந்த நிலையில் எப்போதும் காவல்துறைக்காகவும் அரசுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வாய்மூடி மவுனமாக இருப்பது சர்ச்சையானது. இது விவாதப் பொருளாகவும் மாறியது. இதனால் ரஜினிக்கு வலதுகரமான, காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ஒரு ட்விட்டர் பதிவை இன்று வெளியிட்டார்.

    ரஜினி ஆறுதல் என கராத்தே தகவல்

    ரஜினி ஆறுதல் என கராத்தே தகவல்

    அதில் நடிகர் ரஜினிகாந்த், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்- தொலைபேசியில் குடும்பத்தினரிடம் பேசி இரங்கல் தெரிவித்தார் என கராத்தே தியாகராஜன் பதிவிட்டிருந்தார். ஆனா ரஜினிகாந்தின் மக்கள் மன்றமோ, ரஜினிகாந்த் தரப்போ, இப்படி ரஜினிகாந்த் பேசினாரா? என்பதை உறுதி செய்யவும் இல்லை.

    திமுக செந்தில்குமார் ட்வீட்

    திமுக செந்தில்குமார் ட்வீட்

    இதனால் ஊடகங்களும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் கூறினார் என செய்திகள் வெளியிட்டன. இதனை சுட்டிக்காட்டியிருக்கும் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், அவரு சொன்னாருன்னு இவரு சொன்னதாக அவங்க சொன்னாங்க என ரஜினிகாந்தை கிண்டலடித்து பதிவிட்டிருக்கிறார். டாக்டர் செந்திலின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    DMK MP Dr Senthil tweets on Rajinikanth in Sathankulam Lockup deaths issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X