சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கில் போடுங்க.. நிர்பயா கொலைக்கும்.. சாத்தான்குளம் மரணத்துக்கும் வித்தியாசமே இல்லை.. கட்ஜு ஆவேசம்

நிர்பயா கொலையும், சாத்தான்குளம் மரணமும் ஒன்று என்று கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நிர்பயா கற்பழிக்கப்பட்டபோதும் இப்படித்தான் பிறப்புறுப்பில் இரும்பு தடியை கொண்டு செருகினர்.. அதுபோலவே, பென்னிக்சின் ஆசன வாயில் தடியை செருகி, குடைந்து தாக்கி உள்ளனர்.. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட்டதைபோலவே, தூத்துக்குடி வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிட வேண்டும்" என்று கர்ஜித்துள்ளார் மார்க்கண்டே கட்ஜு!
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழக மக்களுக்கு மிக நெருக்கம்.. இவர் பேசுவதையும், கருத்து சொல்வதையும் பார்த்தால், நம்ம ஊர் என்றே நினைக்க தோன்றும்.. ஜல்லிக்கட்டு விவகாரம் முதல், சசிகலா, ரஜினி அரசியல் விவகாரம் வரை நிறைய கருத்துக்களை துணிந்து சொல்பவர்.

saathankulam: thoothukudi police violence case worse than nirbhaya, says Markandey Katju

"சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல் மசூதிகளில் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உத்தரவிடுமா" என்று கேட்டதுதான் கட்ஜுவின் அல்டிமேட் தில்!

இப்போது சாத்தான்குளம் விவகாரத்துக்கு கொதித்து போய் கருத்து சொல்லி உள்ளார்... உண்மையிலேயே இந்த விவகாரம் இந்த அளவுக்கு பூதாகரமாக வெடித்து கிளம்பும் என்று தமிழக அரசு சத்தியமாக நினைக்கவில்லை.. சில கொடூர குணம் படைத்த போலீஸ்காரர்களால் அரசு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளது.

இந்த விஷயத்தை நிர்பயா வழக்குடன் தொடர்புபடுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது.. அன்று பலாத்காரம் செய்யப்பட்டபோது, நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு தடியால் தாக்கியும் நுழைத்தும் சித்ரவதை செய்ததைபோலவே, சாத்தான்குளம் சம்பவமும் நடந்துள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால், அது தனி நபர்களால், அதாவது பொதுமக்களால் செய்யப்பட்டது.. ஆனால் இது போலீஸ்காரர்களாலேயே செய்யப்பட்டுள்ளது.

"சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய நபர்களே சட்டத்தை மீறியுள்ளார்கள்.. குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.. ஆனால் காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்கள் கடமைகளுக்கு முற்றிலும் முரணான செயலை செய்வதால், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்..

ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், தூத்துக்குடி வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிட வேண்டும்" என்கிறார் கட்ஜு. மாஜிஸ்திரேட் விசாரணை முடிப்பதற்குள் கைது செய்ய முடியாது என்று சட்டம் சொல்கிறது.. உண்மையில், போலீசார் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துவிடுவார்கள்.

விசாரணை முடியும் வரை அவர்கள் காத்திருப்பதில்லை.. இது எல்லாவற்றிற்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டிருப்பது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது... அமெரிக்காவில் ஜார்ஜை கொன்றவர்களுக்கு செய்ததை போலவே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்... இந்த விசாரணையும் அதிவேகமாக முடிக்கப்பட வேண்டும்.. இந்த போலீசார் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால், கடுமையான முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.. இது நாடு முழுவதும் உள்ள போலீசாருக்கும் தெரிய வேண்டும்" என்கிறார்.

English summary
saathankulam: thoothukudi police violence case worse than nirbhaya, says Markandey Katju
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X