சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீகாந்த் ஓட்டு போட்டாரா? இல்லையா?.. அதிகாரியிடம் அறிக்கை கேட்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா?.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்- வீடியோ

    சென்னை: ஸ்ரீகாந்த் ஓட்டு போட்டாரா இல்லையா என்பது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ விளக்கம் கேட்டுள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள், சினிமா பிரபலங்கள் என ஆர்வமாக வாக்களித்தனர்.

    ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார் ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்

    டுவிட்டர்

    டுவிட்டர்

    இந்த நிலையில் வாக்களித்த பிரபலங்களும் தாங்கள் வாக்களித்ததை போல் நீங்களும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

    தேர்தல் அதிகாரி

    தேர்தல் அதிகாரி

    இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த், சாலிகிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களித்ததாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் வாக்களிக்கவில்லை. அவருக்கு மை மட்டுமே வைக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி கூறியதாக சத்யபிரத சாஹூ தெரிவித்திருந்தார்.

    அறிக்கை

    அறிக்கை

    இந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என தெளிவுப்படுத்தும்படி சத்யபிரத சாஹூ தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார். ஸ்ரீகாந்த் வாக்களித்தது போன்று வீடியோ இருப்பதால் அறிக்கை கேட்டுள்ளார்.

    குழப்பம்

    குழப்பம்

    சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இங்கு ஸ்ரீகாந்த் விவகாரத்தில் வாக்களிக்கவில்லை மை மட்டுமே வைக்கப்பட்டது என மாறி மாறி தெரிவிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Satyapradha Sahoo asks whether Srikanth casted his vote or not? also he asks explanation on this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X