சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்- தமிழக தேர்தல் அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா?.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்- வீடியோ

    சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

    தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள், சினிமா பிரபலங்கள் என ஆர்வமாக வாக்களித்தனர்.

    இந்த நிலையில் வாக்களித்த பிரபலங்களும் தாங்கள் வாக்களித்ததை போல் நீங்களும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

    நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்குநிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு

    வாக்குச் சாவடி

    வாக்குச் சாவடி

    இது போல் வாக்களிப்புக்கு முதல் நாளே அனைத்து பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ல ஷெப்பர்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றிருந்தார்.

    பூத் சிலிப்

    பூத் சிலிப்

    அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறப்பட்டது. ஒருவரிடம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழ்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்பது விதி.

    சிறிது நேரம்

    சிறிது நேரம்

    ஆனால் சிவகார்த்திகேயனிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. நியாயப்படி அவர் வாக்களிக்க அனுமதி இல்லை. இதையே தெரிவித்த தேர்தல் அலுவலர்களுடன் சிறிது நேரம் சிவகார்த்திகேயன் வாக்குவாதம் செய்தார்.

    போராட்டம்

    போராட்டம்

    பின்னர் 2 மணி நேரம் கழித்து அவர் வாக்களிக்க அங்கிருந்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து வாக்களித்த கையோடு டுவிட்டரில் வாக்களிப்பது உங்கள் கடமை. அதற்காக போராடுங்கள் என தான் போராடியதை சொல்லாமல் சொல்லி கருத்து போட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

    விளக்கம்

    விளக்கம்

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கியது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.

    வாக்கு கணக்கில்

    வாக்கு கணக்கில்

    சிறப்பு அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிவகார்த்திகேயன் விதிகளுக்கு மாறாக வாக்களித்தாலும் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார் சாஹூ.

    English summary
    TN State Chief Election officer Satya Pradha Sahoo says that despite Sivakarthikeyan vote against rules, his vote also be taken for counting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X