சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ

Google Oneindia Tamil News

Recommended Video

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ அறிவிப்பு- வீடியோ

    சென்னை: ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. அன்றைய தினமே காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்த முடியாது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. பூரியில் நரேந்திர மோடி போட்டியில்லைபாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. பூரியில் நரேந்திர மோடி போட்டியில்லை

    தேர்தல் நடத்த தடை நீங்கியது

    தேர்தல் நடத்த தடை நீங்கியது

    இதையடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தொடர்ந்த வழக்கை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார். இதனால் அங்கு தேர்தல் நடத்த தடை நீங்கியது.

    அரவக்குறிச்சி

    அரவக்குறிச்சி

    அது போல் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே. போஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கும் தேர்தல் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது.

    காலி

    காலி

    மேலும் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இந்த நிலையில் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ கூறுகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டால் ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தாக்கல் செய்யப்பட்டால் வேட்பாளர் மீது வழக்கு தொடரப்படும் என்றார் சாஹூ.

    English summary
    Tamilnadu state electoral officer Satya pradha Sahoo says that Sulur, Thirupparagundram and Ottapidaram byelections will be conducted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X