சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை.. கண்ணீர் விட்ட விஜயபாஸ்கர்.. உருக்கமான கடிதம்!

குழந்தை சுஜித் பலியானது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Minister Vijaya Basker | இப்படி எம்மை புலம்ப அழ விடுவாய் என்று எண்ணவில்லை.. உருக்கமான கடிதம்!-வீடியோ

    சென்னை: குழந்தை சுஜித் பலியானது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான இரங்கல் கடிதம் எழுதி இருக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை, சேர்ந்த சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அன்று மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. ஆனால 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.

    நேற்று இரவு சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுஜித்தின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.

    இருந்து பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும் சுஜித்.. தமிழிசை ஆற்றாமைஇருந்து பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும் சுஜித்.. தமிழிசை ஆற்றாமை

    கவனித்தார்

    கவனித்தார்

    இந்த பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவனித்து வந்தார். சிறுவன் துளையில் விழுந்த அன்று இரவில் இருந்தே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்தில்தான் இருக்கிறார். தொடர்ந்து 4 நாட்களாக அவர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

    சுஜித் பலியானது

    சுஜித் பலியானது

    இந்த நிலையில் சுஜித் பலியானது குறித்து விஜயபாஸ்கர் இரங்கல் கடிதம் எழுதி இருக்கிறார். நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் இன்னும் என்னுள் கேட்கிறது, என் மனம் வலிக்கிறது. நீ எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊன் இன்றி உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம்.

    அழுகை

    அழுகை

    இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டு போல இருப்பாய் என்று நினைத்தோம். கல்லறை இருட்டு போல மாறுமென எண்ணவில்லை. மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். ஆனால் இப்போது மார்சுவரியில் உன்னை பார்க்க மனது வலிக்கிறது.

    உன்னுடைய சத்தம்

    உன்னுடைய சத்தம்

    88 அடி ஆழத்தில் நான் கேட்ட உன்னுடைய மூச்சு சத்தம்தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில், பாச பிணைப்பில், இணைத்து இயங்க வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே உனக்காக அழும் குரல். மனதை தேற்றிக்கொள்கிறேன். இனி நீ கடவுளின் குழந்தை சுஜித் எனக்கு இன்னமும் ஒலிக்கிறது, சோகத்தின் நிழலில், வேதனையின் வழியில் எழுதுகிறேன், என தெரிவித்துள்ளார்.

    English summary
    Save Sujith: Minister Vijaya Basker writes a heartbreaking letter to the Toddler death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X