சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏடிஎம்-ல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க புது அறிவிப்பு.. எஸ்பிஐ அதிரடி.. என்னன்னு பாருங்க

ஏடிஎம்மில் பணம் கொள்ளை போகாமல் இருக்க புது திட்டம் ஒன்றை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஏடிஎம்மில் பணம் திருட்டு போவதை தவிர்ப்பதற்காகவே ஒரு புது திட்டத்தை எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ளது..

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏடிஎம்களில் இருந்து கொள்ளை புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இதுகுறித்து போலீசாரும், கொள்ளையடிக்க எந்த கார்டு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

எஸ்பிஐ ஏடிஎம்மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து அந்த குறிப்பிட்ட கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன..

SBI implemented OTP system to debit money in ATM for 24 hours

இதைதவிர, நம்மிடம் ஏடிஎம் கார்டு தொலைந்து விடும்போதெல்லாம், ஏடிஎம்மில் பணம் திருடு போவதும் இயல்பாக நடக்கிறது.. ஏடிஎம் கார்டை எங்காவது மறந்து வைத்துவிட்டோமா என்று தேடி கண்டுபிடிப்பதற்குள், பணத்தை எடுத்து விடுகின்றனர்.. இதற்கு பிறகு புகார் அளித்து, கார்டை செயலிழக்க செய்கிறோம் என்றாலும், இது காலதாமதமான செயலாக உள்ளது.

இதை தடுத்து, வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க எஸ்பிஐ வங்கியானது, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம்மில் "ஓடிபி" திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.. அதன்படி, இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது ஓடிபி வசதியை பயன்படுத்தி தான் பணம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இது ஓரளவு நல்ல பலனையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்று தந்தது.. எனவே, இந்த கால நேரத்தைதான் தற்போது நீட்டித்து, 24 மணி நேரமும் இந்த வசதியை எஸ்பிஐ மாற்றம் கொண்டு வந்துள்ளது... இந்த திட்டத்தின் மூலம், பணம் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணீடாதீங்க.. முழு விவரம் எஸ்பிஐ வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. மிஸ் பண்ணீடாதீங்க.. முழு விவரம்

அதாவது, எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள், கார்டை செலுத்தியதுமே வழக்கம்போல் அவர்களது பின்நம்பரை பதிவிட வேண்டும்... பிறகு, எவ்வளவு பணம் எடுக்க போகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.. அப்போது, சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும்... அந்த ஓடிபி நம்பரை ஏடிஎம் திரையில் சரியாக பதிவிட்டால் மட்டுமே நம்மால் பணத்தை எடுக்க முடியும்...

இதன்மூலம் மோசடிகளை மேலும் தவிர்க்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி தரப்பு சொல்கிறது. நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 22 ஆயிரத்து 224 கிளைகள் உள்ளன. சுமார் 63 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
SBI implemented OTP system to debit money in ATM for 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X