சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மடை திறந்து பாயும் நதி அலை நான்'.. இசை கலைஞன் என் ஆயிரம் ஆசைகள் நினைத்தது பலித்தது! பாடிய பாலு

Google Oneindia Tamil News

சென்னை: 'மடை திறந்து தாவும் நதி அலை நான்'.. மனம் திறந்து கூவும் சிறு குயில் நான். இசை கலைஞன் என் ஆயிரம் ஆசைகள் நினைத்து பலித்தது' என்று பாடிய எஸ்பிபி காலம் சென்றுவிட்டார்.

40 வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இந்த பாடல், இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் மிக முக்கியமான பாடல் என்றால் அது மிகையல்ல.

1980களில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் உருவான பாடல் தான் 'மடை திறந்து தாவும் நதி அலை நான்'.

இளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு!இளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு!

தன நன... நா... தன நன.நன... நா.

தன நன... நா... தன நன.நன... நா.

கிராமத்து இசை என்று இல்லாமல் முழுக்க முழுக்க மேற்கத்திய இசை பாணியல் உருவாகிய இப்பாடலுக்கு இசை மிரட்டல் என்றால் எஸ்பிபியின் குரல் மிக அற்புதமாக இருக்கும். அதிலும் அவர் ஒரு இழு இழுப்பார், தன நன... நா... தன நன.நன... நா.. என்று' நிச்சயம் அது போன்று பாடுவதற்காக இன்னொரு முறை எஸ்பிபி பிறக்க வேண்டும்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

ஏனெனில் இளையராஜா இசைக்கு மகுடம் சூட்டும் வாலியின் இந்த வரிகளை எஸ்பிபிஅந்த அளவிற்க்கு பாடியிருப்பார். அந்த வரிகளை அப்படியே இங்கு பார்ப்போம்.

"தன நன... தன நன.நன...

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

தன நன... நா... தன நன.நன... நா...

தன நன... நா... தன நன.நன... நா...

ஹேய்... ஹோ... பபப... பபபப...

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்

அமைத்தேன் நான்"

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

லல... லா... லல... லலலா...

நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்

இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

லல... லா... லல... லலலா... லல... லா... லல... லலலா...

 கூவும் சிறு குயில் நான்

கூவும் சிறு குயில் நான்

இந்த பாடலில் உள்ள வரிகளில் உள்ள படி புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இசையமைப்பாளர் இசையராஜாவுக்கும், அதை பாடிய எஸ்பிபிக்கு நிச்சயம் பொருந்தும். அந்த பாடலில் உள்ள மற்றொரு வரிகளான " மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்" என்று வரும் அந்த வரிகளை போலவே அவர் 40 வருடங்களாக குயில் போல் கூவி மறைந்தவிட்டார்.

 நினைத்தது பலித்தது

நினைத்தது பலித்தது

'இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது" என்று எஸ்பிபி பாடியிருப்பார். அதன்படி ஒரு இசை கலைஞனராக எஸ்பிபிக்கு எத்தனையோ விஷயங்கள் இந்த பாடல் வெளியான 40 வருடங்களில் நடந்திருக்கும்.புகழலின் உச்சத்தை தொட்டு மறைந்திருக்கிறார். எஸ்பிபியின் புகழ் பாட மடை திறந்து பாடலை போல் இன்னும பல்லாயிரம் பாடல்கள் உள்ளன. அதை உலகம் பாடிக்கொண்டே இருக்கும்..

English summary
S. P. Balasubrahmanyam sing 'madai thiranthu' song in ilayaraja music in nizhalkal move, directed by barathi raja, lyricst vali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X